படைப்பு நெறிமுறைகள்
சிறுவர்களை முன்னிலைப்படுத்தி சிறுவர் பாடுவது, சிறுவர்களுக்குப் பாடுவது என்ற இரண்டு முறைகளில் கவிஞர்கள் தங்கள் பாடல்களை வழங்கியுள்ளனர். தற்காலத்தில் சிறுவர்களே சிறுவர் இலக்கியம் படைக்கும் படைப்பாளிகளாக உருவாகி வளர்ந்து வருகின்றனர்.
பாப்பா பாட்டு பாடிய பாரதியார், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோர் சிறுவர் இலக்கியப் பாடல்களைப் பாடிய முன்னோடிகளில் சிலர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட கல்வி முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட நூல்களில் சிறுவர்களுக்கு அறிவூட்டும் பாடல்களைப் படைத்தப் படைப்பாளிகளும் இவ்விலக்கியத்தின் முன்னோடிகளாவர். இருந்த போதிலும் பலர் சிறுவர் இலக்கியங்களை படைப்பதை முழுநேரப் பணியாகக் கொண்டனர்.