1. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
  செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
   ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.  Pleasant words are words with all pervading love that burn;
  Words from his guileless mouth who can the very truth discern.

   Sweet words are those which imbued with love and free from deceit flow from the mouth of the virtuous.

 2. அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
  இன்சொலன் ஆகப் பெறின்.
   முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் ஒடுப்பதை விட மேலான பண்பாகும்.  A pleasant word with beaming smile,s preferred,
  Even to gifts with liberal heart conferred.

   Sweet speech, with a cheerful countenance is better than a gift made with a joyous mind.

 3. முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
  இன்சொ லினதே அறம்.
   முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதெ அறவழியில் அமைந்த பண்பாகும்.  With brightly beaming smile, and kindly light of loving eye,
  And heart sincere, to utter pleasant words is charity.

   Sweet speech, flowing from the heart (uttered) with a cheerful countenance and a sweet look, is true virtue.

 4. துன்புறூஉம் துவ்வாமை இல்லாக்கும் யார்மாட்டும்
  இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
   இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கணிவுடன் பழகுவோர்க்கு ‘நட்பில் வறுமை’ எனும் துன்பமில்லை.  The men of pleasant speech that gladness breathe around,
  Through indigence shall never sorrow’s prey be found.

   Sorrow-increasing poverty shall not come upon those who use towards all, pleasure-increasing sweetness of speech.

 5. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
  அணியல்ல மற்றுப் பிற.
   அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிற்ந்த அணிகலன் வேறு இறுக்க முடியாது.  Humility with pleasant speech to man on earth,
  Is choice adornment; all besides is nothing worth.

   Humility and sweetness of speech are the ornaments of man; all others are not (ornaments).

 6. அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
  நாடி இனிய சொலின்.
   தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்.  Who seeks out good, words from his lips of sweetness flow;
  In him the power of vice declines, and virtues grow.

   If a man, while seeking to speak usefully, speaks also sweetly, his sins will diminish and his virtue increase.

 7. நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
  பண்பின் தலைப்பிரியாச் சொல்.
   நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்.  The words of sterling sense, to rule of right that strict adhere,
  To virtuous action prompting, blessings yield in every sphere.

   That speech which, while imparting benefits ceases not to please, will yield righteousness (for this world) and merit (for the next world).

 8. சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
  இம்மையும் இன்பம் தரும்.
   சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒறுவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தர்க்கூடியதாகும்.  Sweet kindly words, from meanness free, delight of heart,
  In world to come and in this world impart.

   Sweet speech, free from harm to others, will give pleasure both in this world and in the next.

 9. இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
  வன்சொல் வழங்கு வது?
   இனிய சொற்க்ள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக் எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?  Who sees the pleasure kindly speech affords,
  Why makes he use of harsh, repellant words?

   Why does he use harsh words, who sees the pleasure which sweet speech yields ?

 10. இனிய உளவாக இன்னாத கூறல்
  கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
   இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.


  When pleasant words are easy, bitter words to use,
  Is, leaving sweet ripe fruit, the sour unripe to choose.

   To say disagreeable things when agreeable are at hand is like eating unripe fruit when there is ripe.