சனி, 22 மே, 2010

சுயமரியாதை இயக்கப் பெண்கள் பங்கேற்ற கூட்டங்களும் மாநாடுகளும்




4.8.1929;…திருநெல்வேலியில் நடைபெற்ற சுயமரியாதை இயக்கப் பெண்கள் மாநாடு- சுயமரியாதைக் கொடியேற்று விழாவில் உறீ மரகதவல்லி சொற்பொழிவு ஆற்றினார்.

20.5.1929..திராவிடன் இதழ்- ஈரோடு நகரத்தில் உண்மை நாடுவோர் சங்கத்தில் சார்பில் பெண்மணிகளே பொறுப்பேற்று நடத்தி வைத்த சடங்குகள் பற்றிய தொரு கருத்தரங்கச் செய்திகள் மிக விரிவாக வெளியிட்டுள்ளது. இதில் இலட்சுமி அம்மையார் தலைமையுரை ஆற்றியுள்ளார். சின்னத்தாயம்மாள் பங்காரு அம்மாள் பெரியாரின் தங்கை எஸ். ஆர். கண்ணம்மாள் பாப்பா அம்மாள் ஆகியோர் உரையாற்றியுள்ளனர்.

….திருவிதாங்கூரில் நடைபெற்ற முதல் சுயமரியாதை விதவைத் திருமணத்தில் கலந்து கொண்டு நடத்தி வைத்தவர்கள் அ. அண்ணாமலையம்மாள் சிவதாணு அம்மாள். இதற்கான நிழற்படம் (1929- குடியரசு) வெளியிடப்பட்டது.

…..நெல்லுரில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் தலைவர்களாகவும் பிரதிநிதிகளாகவும் கலந்து கொண்டவர்கள்… திருமதி. இந்திராணி பாலசுப்பிரமணியம் திருமதி அலர்மேலு மங்கைத் தாயாரம்மாள்.. இதற்கான நிழற்படம் (1929- குடியரசு) வெளியிடப்பட்டது.

..1932 ஆம் ஆண்டு நடைபெற்ற சேலம் ஜில்லா சுயமரியாதை பெண்கள் மாநாட்டிற்கு திருமதி எஸ். நீலாவதி தலைவராக இருந்து தலைமையுரை ஆற்றியுள்ளார். சேலம் ஜில்லா சுயமரியாதை பெண்கள் மாநாட்டின் திறப்பாளர் திருமதி ஆர். அன்னபூரணி அம்மாள். இவர் இம்மாநாட்டில் சொற்பொழிவாற்றியுள்ளார். (குடியரசு 1932 மே. 22)

..தஞ்சை ஜில்லா இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் தலைவரான திருமதி எஸ். குஞ்சிதம் பி.ஏ. எல்.டி தலைமையுரை ஆற்றியுள்ளார். (குடியரசு 1932 ஜீன் 25)


..புதுவை முதலாவது வாலிபர் மகாநாட்டில் திருமதி இந்திரணி பாலசுப்பிரமணியம் தலைவர் பொறுப்பேற்று தலைமை யுரை ஆற்றியுள்ளார்.
(குடியரசு 1932 ஜீன் 26)



..தஞ்சை ஜில்லா மூன்றாவது சுயமரியாதை மாகாநாடு நாகபட்டினத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தோழர் எஸ். நீலாவதி துவக்கயுரையாக பேறுரை ஆற்றியுள்ளார். (குடியரசு 1933 ஏப்ரல் 9)


..வடஆற்காடு ஜில்லா முதலாவது சுயமரியாதை மாநாட்டை துவக்கிய தோழர் எஸ். நீலாவதி சொற்பொழிவாற்றியுள்ளார். (குடியரசு 1933 மே. 14)


..திருச்சிராப்பள்ளி தாலுக்கா முதலாவது சுயமரியாதை மாகாநாடு 21.5.1933 ஆம் நாள் உறீரங்கத்தில் நடைபெற்றது. இதில் நமது ஒரு வருடத் திட்டம் எனும் தலைப்பில் தோழர் எஸ். குஞ்சிதம் பி.ஏ. எல்.டி தலைமையுரை ஆற்றியுள்ளார். குடியரசு 1933 ஜுலை 16). இம்மாநாட்டுத் திற்ப்பாளர் வரவேற்பு தலைவர் காரைகுடி முத்துபட்டணம் தோழர் சுப. வுpசாலாட்சி. இவர் திருச்சி தாலுக்கா முதலாவது சுயமரியாதை மாநாட்டை திறந்து வைத்து உரையாற்றினார்.


..சென்னை சுயமரியாதை இளைஞர் மன்ற்த்தின் முதலாவது ஆண்டு விழாவில் பண்டிதை ரங்கநாயகி அம்மாள் சொற்பொழிவாற்றினார்.
( குடியரசு 1933 நவம்பர் 19)



..1935 ஆம் ஆண்டில் நடை பெற்ற அருப்புக்கோட்டை பெண்கள் மகாநாட்டிற்கு தோழர் எஸ். நீலாவதி அம்மையார் தலைவராக இருந்து சொற்பொழிவாற்றினார்.


..1935 ஆம் ஆண்டில் நடைபெற்ற சீர்காழி ஆதி திராவிடர் வாலிபர் மகாநாட்டிற்கு தலைவர் பொற்ப்பேற்று தோழர் ஆர். அன்னபூரணி அம்மாள். சொற்பொழிவாற்றியுள்ளார். (குடியரசு 1935 ஜீலை 21)


..கோவை மாவட்ட ஏழாவது திராவிடர் கழக மாநாடு. 1949 மே 28 ஆம் நாள் கோயம்புத்தூ ரில் நடைபெற்றது. தீ. போ. வேதாசலம் தலைமையில் அண்ணா திறந்து வைக்க மூவலூ ர் இராமாமிர்தம் அம்மையார் கொடி உயர்த்தினார். ( தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு.கவிஞர் கருணானந்தம். புக்.196.


..ஈரோட்டில் அண்ணா தலைமையில் 19 வது மாகாண திராவிடர் கழக தனி மாநாடு 1948 அக்.23-24 தேதிகளில் நடைபெற பெரியார் ஏற்பாடு செய்தார். அண்ணாவையும் பிறதலைவர்களையும் இரட்டைமாட்டுச் சாரட்டு வண்டியில் அமர்த்தி பெரியார் ஊர்வலத்தில் நடந்தே வந்த்து கண் கொள்ளாக் காட்சி. கருப்பு சட்டை போட்டு மேல் துண்டை இடுப்பில் கட்;டி வியர்க்க விருவிருக்க- தூத்துக்குடி தெர்ண்டர் படைத் தலைவரான கே.வி.கே. சாமி அதிசயிக்க – பெரியார் சிங்கஏறுபோல் ஈரோடு வீதிகளில் நடை போட்டார்.மாநாட்டை எஸ். குருசாமி தொடங்கி வைக்க சென்னை இந்திராணி பாலசுப்பிரமணியம் கொடி உயர்த்தினார். இம்மாநாட்டின் இரண்டாம் நாள் இரவு குஞ்சிதம் குருசாமி தலைமையில் கலைஞர் மு. கருணாநிதி நடித்த தூக்கு மேடை நாடகம் நடந்தது. ( தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு.கவிஞர் கருணானந்தம். புக்.190.)
















1 கருத்து: