சனி, 24 அக்டோபர், 2009

அண்ணா

'

இயல், இசை, நாடகம் மக்களுக்கு அறிவு வளர, ஆர்வமூட்ட, மகிழ்ச்சி பிறக்க, நன்னெறியிலே நடக்க வைக்கப் பயன்பட வேண்டும். வெறும் கற்பனை, வீண் கனவு, விபரீத புத்தி, வெறுக்கத்தக்க ஆபாசம், மூடத்தனம், குருட்டுக் கோட்பாடு, கோணல் சேட்டைகள், சடங்குகள், மிரட்சி, பீதி, மனமயக்கம் ஆகிய பீடைகள் பரவாதிருக்கும் சமுதாயமே, புத்துலகு கோருகின்றது. முத்தமிழ் இதற்குப் பயன்படும்படி இன்று உளதா என்பதை ஆராயுங்கள் "(முத்தமிழ்க் கற்றோரே - திராவிடநாடு, 2.8.1942) என முத்தமிழ்க் கற்றோரே தலைப்பில் மொழியும் கலையும் அறிவு வளர்ச்சிக்குரியதாக, சிந்திக்கும் ஆற்றலை வளர்ப்பதாக அமைய வேண்டும் என்ற கருத்துடன் அண்ணா எழுதியுள்ளார். அப்படி அறிவுணர்ச்சியை வழங்மாமல், விதி, மேல் உலக வாழ்வு, குலத்துக்கோர் நீதி என்ற கருத்தை வழங்கும் எதையும் அறிவுக் கொலை என்றும் குறிப்பிடுகின்றார். கலை மக்களின் அறிவுக்குக் கொலைக் கருவியல்லவே! மக்களின் மாண்புகளை வளரச் செய்யும் வாய்ப்பு! அறிவைத் துலங்க வைக்கும் சக்தி

"

கலை வளர்ச்சியிலே கருத்துக் கொண்டோரே

! கற்றோரே! கூறுமின். இன்று நம் தமிழகத்திலே இயல், இசை., நாடகமென்னும் துறைகளிலே போதிக்கப்பட்டு வரும் விஷயங்கள் உன்னதமான கலையா, அன்றி அறிவுக் கொலையா என்பதனை

"

புதுக்கருத்துகள்

, சமுதாய நீதி, மக்கள் எழுச்சி ஆகியவைகளைக் கொண்ட காவியங்களை இயற்ற உங்களால் முடியும். மக்களின் இன்ப வாழ்வுக்கு, விடுதலைக்கு, அறிவுக்கு, சமத்துவத்துக்குத் தேவையான புதிய நூல்களை, கவிதைகளை, பண்களை, நாடகங்களை இயற்றும் சக்தி உங்களுக்கு உண்டு என்று முத்தமிழ் கற்றவர்களுக்கு புதிய நம்பிக்கையூட்டுகின்றார் அண்ணா

.

"

விதி விதி என்று விம்மாதே! கதி இலையே என்று கதறாதே. மதியிழந்து மனமயக்கம் ஆகாதே. என்னை உணரு! உன் கஷ்டத்தின் காரணத்தைக் கண்டு உலகைத் திருத்தி அமைப்பேன் என்று முழக்கம் செய்

.

இங்கு வாழ்வேன் என்று இயம்பு

! இவ்வுலகு மாயை எனில்,. எனக்கு மட்டுமோ, சிற்றரசர் சீமாங்களுக்குமோ என்று கேள். மாயா உலகு அவர்கட்கு மகிழ்ச்சியும் எனக்கு வாட்டமும் தருவானேன்? வெட்டி வீழ்த்துவேன் வேதனை தரும் முறைகளை என்று கூறி வீரனாக வெளியே வா

!

"

உறுதி! உறுதி! உறுதி! " ஒன்றே ஒன்றே சமூகம் என்றெண்ணார்க்கு இறுதி! இறுதி! இறுதி! எனும் புரட்சி மொழி பேசு

"

முத்தமிழே

! இவைகளை என் தோழர்களுக்கு இனியேனும் நீ தரவேண்டும்" "(முத்தமிழ்க் கற்றோரே - திராவிடநாடு

, 2.8.1942)"

என்று மொழியின் மூலம் மக்கள் சமுதாயத்தில் புத்துணர்ச்சியும்

, புதுமலர்ச்சியும், புதிய வாழ்வும் உருவாக வேண்டும் என்பது அவருடைய அறிவுக் கோட்பாடாகும். அறிவுத் துறைகளும், அறிவியல் முன்னேற்றங்களும் மடமையைப் போக்கி சமத்துவ வாழ்வை நோக்கி மற்ற நாடுகள் நடைபோடும் பொழுது நம் மண்ணில் மீண்டும் மீண்டும் மடமையில் மக்களை மூழ்கடிக்க, அழுத்தி வைக்க ஒரு கூட்டம் செயல்படுகிறது என்பதை சேலம் சுயமரியாதை மாநாட்டிற்கு (1943) தொண்டர்களை அழைக்க 'சேலம் வாரீர்' என தலைப்பிட்டு திராவிடநாடு (10.1.1943) இதழில் எழுதினார்

.

"

அற்புதம் செய்வோன், ஆரூடக்காரன், மாந்திரீகன் என்ற தெகிடுதத்தக்காரர்கள் ஒவ்வோர் நாட்டிலும் ஓர் காலத்தில் உலவினர். ஊரை அடக்கினர். ஆனால் அறிவு வளர வளர, அவர்களின் ஆதிக்கம் அழிந்தது. மக்களின் மனம் பண்படப் பண்பட இத்தகையவர்களை நம்பும் மனப்பான்மையை மாற்றிக் கொண்டனர். அறிவு உலகின் எதிர்ப்ப்பும், கேலியும், கண்டனமும், ஏய்த்து வாழ்ந்த கூட்டத்தை அடக்கி ஒடுக்கிற்று. ஏமாளிகளாக இருந்த மக்கள் பின்னர் விடுதலை பெற்று, வீறு கொண்டெழுந்து விஞ்ஞானத்தின் துணைகொண்டு வாழ்வை வளமாக்கிக் கொண்டனர். இங்கோ! இருபதாம் நூற்றாண்டிலும் ஏடு பல கற்று, பட்டம் பல பெற்று விரிந்து பரந்த அறிவு பெற்றோர் என்று விளம்பரப்படுத்தப்பட்டு, விவேகி என்ற விருதுடன் உலவினாலும், மந்திரி, நிர்வாகி, ஆசான், ஆசிரியன், தலைவன், நடிகன் எனும் எந்தப் பதவியில் அமர்ந்தாலும் ஒரு கூட்டம் மக்களை மீண்டும் மீண்டும் மடத்தனத்தில் அழுத்தி வைக்கவே தங்கள் அறிவு ஆற்றல் செல்வாக்கு அதிகரரம் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது. மக்களின் பட்டிக்கு ஓநாயாக உள்ளனர். தமது சுயநலம் குலனலமன்றிப் பிறிதொன்றினைப் பற்றிக் கருதார். பேதமை போக்க முன் வாரார். சாதனை செய்து தமது சோற்றுத் துருத்தியைச் சொகுசாக்கிக் கொள்வதற்காக ஏதுமறியாத மக்களை எடுப்பார் கைக்குழவிகளைக் கொடுமையான நிலையிலே வைத்து, அவர்களின் உழைப்பை உறிஞ்சிக் கொழுத்து ஊன் சுமந்து திரிகின்றனர். எந்த அறிவுத்துறை, விஞ்ஞான வழி, பிரசாரபீ'டம், மடமையைப் போக்க மற்ற நாடுகளிலே பயன்பட்டனவோ, அதே துறைகள் இங்கு மக்களின் மடத்தனத்தையே நம்பி வாழும் கூட்டத்திடம் சிக்கிக் கொண்டிருப்பதால் மருந்தே விஷமாக்கப் படுகிறது

."

என்று மக்களின் அறிவு விழிப்புணர்ச்சியின்றி ஏமாளிகளாக இருக்கின்றானரே என்று கவலையுடன் எழுதினார் அண்ணா

. இதற்கு அறிவைத் தர வேண்டிய செய்தி ஏடுகளும் உறு துணையாக இருக்கின்றானவே! எனறு வெகுண்டு எழுதினார்

.

'

பத்திரிகையின் இலட்சியமென்ன? மக்களை இத்தகைய மடிசஞ்சிகளிடம் காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கும் ஈனப் பிழைப்புத்தானா? வைதீகத்துக்கும் வகையில்லாதாருக்கும் இடையே நின்று தரகு வேலை செய்வது தான், அரசுகளையே ஆட்டி வைக்கும் பத்திரிகையின் பணியா? வெட்கம் மானம் ரோஷம் இருக்க வேண்டாமா? விவேகி என்ற பெயருக்கேற்றபடி செயலிருக்க வேண்டுமே என்ற உணர்ச்சி வேண்டாமா? சீச்சி! எதைச் செய்தேனும் எட்டடுக்கு மாடி கட்டி அதிலே பெண்டு பிள்ளைகளுடன் உலவுவதுதான் வாழ்க்கையின் இரகசியம் என்றிருக்கலாமா? என்று கேட்கிறோம்" திராவிடநாடு - 10.1.1943) என்று கடுமையாகச் சாடியுள்ளார். தமிழ்ச் சமுதாயம் அறிவுணர்ச்சியும் மான உணர்ச்சியும் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் அண்ணாவின் ஒவ்வொரு எழுத்தும், சொல்லும் அமைந்திருந்தன. பகுத்தறிவைப் பரப்பும் திராவிடர் கழகக் கொள்கையே திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை என்பதை சேலம் அரிசிப்பாளையத்தில் சேலம் சித்தையன் தலைமையில் 17.10.1949 அன்று அறிஞர் அண்ணா தி.மு.கழகக் கொடியை ஏற்றி வைத்து திராவிடர் இயக்க வரலாற்றில் இடம் பெறத் தக்க அரியதொரு சொற்பொழிவை நிகழ்த்தினார்

.

அப்போது அவர்

" இடந்தேடிகள் மூட்டிவிடும் பகை உணர்ச்சிக்குப் பலியாகாமல் இருந்தால் திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் மோதிக் கொள்ளாமல், இரு சக்திகளும் ஒரு சேர பழமையையும் பாசிசத்தையும் தாக்கிடும் 'இரட்டைக் குழல் துப்பாக்கியாக நாட்டிலே விளங்கமுடியும்

.

நமது முன்னேற்றக் கழகம் பெரியார் வகுத்த கொள்கையின் மீதுதான் கட்டப்பட்டுள்ளது

. இதுவரை பழமையை பாசிசத்தை தாக்கவும் போக்கவும் திராவிடர் கழகம் மட்டுமே பாடுபட்டு வந்தது. அதனால் அது ஒற்றைக்குழல் துப்பாக்கியாக இருந்து வந்தது. ஆனால் இப்போது திராவிடர் முன்னேற்றக் கழகமும் தோன்றியிருப்பதால் பழமையையும் பாசிசத்தையும் தாக்கவும் போக்கவும் இரு கழகமும் இரட்டைக்குழல் துப்பாக்கியாகி விட்டது," ( மாலைமணி

22.10.49)

அண்ணாவைப் போல தந்தை பெரியாரும் திராவிட நாடு இதழோடு

'குடி அரசு' இதழை ஒப்பிட்டு 'இரட்டையர் ' என்று சொன்னார். இவ்விரண்டையும் ஆதரிக்க வேண்டும் என்று தமிழர்களுக்கு 1943-லேயே அறிவுரை கூறினார்

.

"

இந்தப் பத்திரிகைகள் இரண்டும் இல்லாவிட்டால் இன்று தமிழர்களுக்கு சமுதாயத் துறையிலோ- அரசியல் துறையிலோ வேறு வேலை என்ன இருக்கிறது? தமிழர்களுக்கு இந்த இரண்டு பத்திரிகைகளையும் ஆதரிப்பதை விட, அவர்கள் செய்யும் வேறு வேலைதான் என்ன என்றும் கேட்கிறோம்

"

(

குடிஅரசு

- 23.10.1943)

தந்தை பெரியார் எவ்வாறு அறியாமையைப் போக்கி அறிவுணர்ச்சி பெற விளக்கம் தருவாரோ அதைப் போலவே திராவிட நாடு இதழிலும் தம் கருத்துக்களை விளக்கமாக எழுதினார்

.

"

ஆபாசமும் அறிவுக்குப் பொருந்தாததும், வெறும் கற்பனையும் கருத்தைக் கெடுத்திடுவதுமாகிய, பொய்யுரைதனைக் கூறித் தமிழ் மக்களை தாசர்களாக்கவே, தானத்தைப் பறிப் பல பல கதைகளை ஆரியர் எழுதி வைத்தனர். எனவே பணம் பறிபோவதுடன் புத்தியும் போய் தற்குறித் தனமும் தரித்திரமும் தமிழனுக்குச் சொத்தாகி விடுகிறது. என்வேதான் நான் இத்தானாதிகளைக் கண்டித்தேன். சாமான்யர்கள் சொன்னதென்று எழுதினால், எவரும் சரியா, முறையா அறிவுக்குப் பொருந்துகிறதா இல்லையா, என்பதை ஆராயத் தொடங்குவர். அந்த ஆராய்ச்சி மனோபாவம் வளரக் கூடாது என்பதிலே ஆரியர் ஆதி நாட்கள் முதலே மிக மிக அக்கறை காட்டியுள்ளனர். ' படித்த சூத்திரனையும் குளித்த குதிரையையும் நம்பாதே' என்று மனு தன் குலத்தவருக்கு கூறினாராம்! ஆண்டவன் சொன்னது என்று எதையும் தமிழரிடை பரவச் செய்யலாம் என்று ஆரியர் தெரிந்து, தானாதி விஷயமாக கடவுள் உரைத்தார் என்று முத்திரையிட்டு ஏடுகளை வெளியிட்டனர்" (திராவிட நாடு 30.1.44) ஆரியர் எவ்வளவு பேராசையுடன் செயல்பட்டனர், தமிழரின் அறிவுச்செல்வமும், பொருட்செல்வமும் எப்படி பறிபோயின் என்பதை எழுதிக் காட்டினார் அறிஞர் அண்ணா. இறுதிவரை வருணாசிரமத்திற்கு பரம எதிரியாக அறிவுத் தோழனாகவும் விளங்கினார்

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக