ஞாயிறு, 25 அக்டோபர், 2009

சட்டத் தமிழ்
சட்டத்துறை கலைசொற்களை மொழிபெயர்ப்பது, சொல்லாக்கம் செயவது சட்ட மொழிபெயர்ப்பிற்கு மேற்கொள்ளப்படும் முதற்கட்ட பணியாகும். அவற்றை வழக்கில் பயன்படுத்தும் பொழுது எவ்வாறு பயன்படுத்துதல் வேண்டும் என்பதை வழக்கறிஙர் மா.சண்முக சுப்பிரமணியம் அவர்கள் எழுதிய ‘சட்டத்தமிழ்‘ என்ற நூலில் விளக்கியுள்ளார். உரிமை இயல் நடைமுறைச்சட்டம், குற்றவியல் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சான்றியல் சட்டம், தீங்கியல் சட்டம், ஒப்பந்தச் சட்டம், சொத்துரிமை மாற்றுச் சட்டம், அரசியல் அமைப்புச் சட்டம் நீதிப் பேராணைகள் (The code of Civil procedure, Criminal Law, Code of Criminal Procedure, Evidence Act, Law of Torts, Contract Act, The Transfer of property Act Constitution of India, and Writs) ஆகிய சட்டப் பிரிவுகளுக்குத் தொடர்பான சொற்களை தமிழில் வழங்கும் முறைகளையும், உரிய பொருளில் வழங்க வேண்டியதின் முக்கியத்துவத்தையும் இந்நூல் விளக்குகிறது. சட்ட மொழி பெயர்ப்பாளருக்கு வழிகாட்டி போல சொற்களுக்கான முழுமையான விளக்கம் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.
(எடு) அறத்திற்கும் சட்டத்திற்கும் உள்ள வேறுபாட்டினைத் தௌ¤வாகக் குறிக்க வேண்டிய இடங்களில், சட்டத்தை "positive Law" என்றும் அறத்தை "Natural Law" என்றும் பிரித்துக் கூறுவார்கள். "Positive Law"என்றால் ‘அறுதியாக்கப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்ட சட்டம்‘ என்பதே அகராதிப் பொருளாகும். ‘அறுதியான சட்டம் ‘ ‘இயற்கைச் சட்டம் என்ற கருத்துக்களின் வேறுபாட்டைச் சட்டம், ‘அறம்‘ என்ற சொற்கள் தமிழிலே தௌ¤வாக உணர்த்துகின்றன. ‘அறம்‘ என்ற கருத்தினைப் புலப்படுத்தும் பொழுது "Law" என்ற சொல்லைச் சேர்த்து ஆங்கிய நூல்களில் பயன்படுத்துவதுகுழப்பத்தையே விளைவிக்கின்றது.
"Positive Law" என்பது அரசால் இயற்றப்பட்ட சட்டத்தையே குறிக்கின்றது. எனவே நாம் அதை ‘அரசுறுத்து நெறி‘ என்று தமிழாக்குகிறோம், "Natural Law’ ‘Positive Law’ என்பதற்குள்ள வேறுபாட்டினைக் குறிக்கும் வகையில் அறநெறி, அரசுறுத்து நெறி என்று தமிழில் கூறுகிறோம். இந்த இடத்தில் "Law" என்ற சொல் ‘நெறி‘ என்ற பொருளையே உணர்த்துவதாகும் ‘Natural Law’ ‘Positive Law’ என்ற ஆங்கிலச் சொற்களை விட ‘அறநெறி‘, ‘அரசுறுத்து நெறி‘ என்ற தமிழ்ச் சொற்கள் பொருளை நன்கு உணர்த்துகின்றன‘1‘
ஒரு மூலச்சொல் குறிக்கும் பொருளை உணர்ந்து மொழி பெயர்த்தல் சட்டத்துறை மொழிபெயர்ப்பில் மிகவும் முக்கியமானதாகவும்.
---------------------------------------------------------------



1) சட்டத்தமிழ், மா.சண்முக சுப்பிரமணியம், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பதி. 1969, ப.44 - 45,

மொழிபெயர்க்கப்பட்ட சட்ட நூல்கள்
1. ஆறுமுகமதலி & பார்த்தசாரதி செட்டி எஸ்.ப.து.

இண்டியன் பீனல்கோடு, 1860-ஆம வருடத்திய 25-வது சட்டம், முதற்பதிப்பு பாலு பிரதர்ஸ்; கிரௌன்ஸ் பிரஸ், சென்னை, நவம்பர், 1888. தமிழ் மக்களுக்கு உபயோகமாகும் வகையில் இந்நூல் 1860-ம் வருடத்திய இண்டியன் பீனல் கோடு 25-வது சட்டத்தைத் தமிழாக்கம் செய்து அதற்கான விணக்கங்களும் 1886-ம் வருடம் வரையில் இச்சட்டத்திற்கு சம்மந்தமான உயர்நீதி மன்றங்களின் சட்டங்களையும் கொண்டுள்ளது இந்நூல் விலை 4, பக்.290.
2. ஆறுமுக முதலி & பார்த்தசாரதி செட்டி. எஸ்.
கிரிமினல் சட்டம் ((The Criminal Code comprising Criminal Procedure Code. Indian Penal Code and Indian Evidence Act passed upto June 1897 with all amendments)
முதற்பதிப்பு, பாலுபிரதர்ஸ்,. அல்பீனியன் அச்சுக்கூடம், சென்னை, ஜுலை 1897, பீனல்கோடு உள்பட இதர சட்டங்களும் இந்தியன் எவிடன்ஸ் ஆக்ட், 1872ம் திருத்தச் சட்டங்களும் அடங்கியது. விலை 4.00 பக்.290.
3. கிராம, ஐயங்கார்.வி.
கிண்டர் லேயின் லா அப் எவிடென்ஸ் ( Kinderley’s law of evidence ) இரண்டாம் பதிவு, எச்.டபிள்யு லாரி, சி.கே.எஸ். பிரஸ், சென்னை, ஜுன் 1868. நம் நாட்டில் உள்ள ஆங்கிலம் தெரியாதவர்களுக்குப் பயன்படுமாறு தமிழில் அமைந்த அரசாங்க விசேடத் தேர்வுக்கான நூல் விலை 3.00 பக் 244.
4. சாமிஐயர், புதுக்கோட்டை
மானுவல் ஆப் தி லா ஆப் டார்ட்ஸ் அண்டு ஆப் தி மெஷர் ஆப் டாமேஜஸ் (Manual of the law of the torts and of the measure of damages)
முதற்பதிப்பு, பி.வெங்கட்ராவ் வர்த்தமான தரங்கினி அச்சுக்கூடம் சென்னை, பிப்ரவரி 1872,
வழக்காடுபவர், தேர்வு எழுதும் மாணவர்களின் உபயோகத்திற்காக கொய்லட்டினுடைய ஆங்கில மூலத்தினின்றும் எழுதப்பட்ட பொருட்செறிவும் தௌ¤வும் உடையத் தமிழாக்கம் விலை ரூ.7.00 பக்.250.
5. சுப்பராய பாரதி ஐயர் வி. & கிருஷ்ணசாமி ஐயர்.வி.
இந்தியன் லிமிடேஷன் ஆக்ட், நிர் 15/1877 Indian Limitation Act XV of 1877) முதற்பதிப்பு சி.பாஸ்டர் அண்டு கம்பெனி, சென்னை, ஜுலை 1880, லிமிடேசன் ஆக்டின் தமிழ் மொழிபெயர்ப்பு அதற்கான முகவுரையுடனும் விளக்க உரையுடனும் தரப்பட்டுள்ளது. விலை 2.00 பக்.170
6. சுப்பிரமணியன் ஆர்.எம்
தந்தி சட்டங்கள், முதற்பதிவு ஆர்.எம்.சுப்பிரமணியன், கலாரத்னாகரம் அச்சுக்கூடம், சென்னை, ஜுன் 1890, தந்தி சம்பந்தமான கலைச்சொற்களை விவரிக்கும் நூல்,
7. சுப்பராய ஐயர்.ஏ,
சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிக்கை - தமிழில் (A Tamil summary of Madras High Court Reports - Vol.V Part 1) முதற்பதிப்பு, கே.ராமாநந்தலு, தத்துவபோதினி பிரஸ், சென்னை.
8. கிருஷ்ணசாமி அய்யர் பி.ஸி.
சென்னை நியாய போதினி இந்தியன் எவிடன்ஸ் ஆக்ட், 1872, முதற்பதிப்பு, பி.எம். சபாபதி முதலியார் மற்றும் பி.ஸி, கிருஷ்ணசாமி அய்யர், பாஸ்டர் பிரஸ், பிப்.1875, விலை 3.00 பக் 244.
சென்னை நியாய போதினி இந்தியன் எவிடன்ஸ் ஆக்ட் பாகம் 223, விளக்கத்துடன் முதற்பதிப்பு, ஏப்ரல் 1875, புதிய எவிடன்ஸ் ஆக்டின்.
9. குருசாமி முதலி, எஸ்.டி.
மனுதர்ம சாஸ்திரம், மூன்றாம் பதிப்பு, எஸ்.டி.குருசாமி முதலி, ஸ்டார் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, ஜனவரி 1897, இந்து சட்டமாகிய மனுதர்ம சாஸ்திரம் ஒவ்வொரு சுலோகத்துக்கும் தமிழ்விளக்கத்துடன் கூடியது. சமயக் கடமைகள், சடங்கு வதிகள், சுவீகாரம், உரிமை முறையில் சொத்து அடைதல் போன்றவற்றைக் கூடுகிறது. விலை 3.80. பக் 847.
9. சட்ட பயிற்சியாளர்களுக்கான சட்டம் XVIII 1879 Legal Practioners Act, முதற்பதிப்பு, எஸ்.பி. நரசிம்மலு நாயுடு, கிரசண்ட் அச்சுக்கூடம், கோயம்புத்தூர், மே.1882, விலை .0.8.0 பக்கம் 26
10. குருசாமி நாயுடு.ஜி.
மானுவல் ஆப் ரெவின்யூ கோர்ட், முதற்பதிப்பு, எஸ்.சுப்பிரமணிய ஐயர், வித்யா வர்த்தினி பிரஸ், சென்னை மார்ச் 1879, ஜமீன் நிலங்களக்கும் ரயத்துவாரி ஜில்லாக்களுக்கும் சம்பந்தப்பட்ட சட்ட திட்டங்களின் சுருக்கங்கள் அடங்கிய நூல் இது. அப்காரி, இனம், ஸ்டாரியன், ஜாகீர், ஆகியவைகளுக்கும் சம்பந்தப்பட்ட சட்ட திட்டங்களைக் கொண்டது இந்நூல் விலை 3.00 பக்.452.
11. முத்துசாமி பாரதி டி.ஏ.
சேலம் மாவட்ட நீதிபதியின் தீர்ப்பு (The Judgement of Salem District Judge in the matter of complaint of Ramalinga Asari against Subaraya Chetty) முதற்பதிப்பு பி.குப்புசாமி முதலி, தொண்டை மண்டலம் அச்சுக்கூடம், சென்னை நவம்பர் 1895, பொன்நகை செய்யும் ஆசாரி வேதத்தில் சொல்லியபடி சடங்குகள் செய்ய இதர சாதியினர் பறையன் ஒருவனை விட்டு அடிக்க, சுப்பராய செட்டி முதலியவர் மீது ஆசார் நஷ்ட ஈட்டு வழக்குத் தொடுக்க, அதற்கு நீதிபதி நீதி வழங்கினார் என்பது இதன் வரலாறு.
12. வியரங்கம் பிள்ளை பி.என்
இந்தியன் பீனல்கோடு வாகாட்டி 1860 ஆம் வருடத்திய 45 வது சட்டம் (A guide to the Indian Penal code Act XLV 1860 ) முதற்பதிப்பு பி.எம்.விஜயரங்கம் பிள்ளை, ஸ்டார் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, டிச.1898 விலை 1.12..0 பக் 504,
13. விஸ்வநாத முதலி
வியவகாரக் கண்ணாடி, முதற்பதிப்பு எஸ், சோமசுந்தரம் முதலியார் ஸ்டார் ஆப் இந்தியா அச்சுக்கூடம், சென்னை, நவ.1870 சாதாரண நடையில் இந்துக்களுக்கான சொத்துரிமைச் சட்டத்தை விளக்கம் தமிழ்நூல் விலை 0.6.0 பக் 108.
14. ராமராவ். .சி
சித்தாந்த சங்கிரகம், மார்ச் டிசம்பர் 1878, முதற்பதிப்பு, வி.கே.ராகவாச்சாரி, வியவகார தரங்கினி அச்சுக்கூடம் சென்னை, ஆகஸ்ட் 1879, இந்தியச் சட்ட அறிக்கைகளின் மொழிபெயர்ப்பு ஒன்பது பாகங்களில் உள்ளன.
15. ராமானுஜாசாரி டி.சி.ஐ.
மனுநீதி, (Manu’s Code or Manu Dharma Sastram) இரண்டாம் பதிப்பு ஏ.சண்முகப்பச் செட்டி, எம்பரஸ் ஆப் இண்டியா பிரஸ், சென்னை, பிப்ரவரி 1889, மனுவினால் எழுதப்பட்ட இந்து தர்ம சாஸ்திரத்தின் ஓர் தமிழ்மொழி பெயர்ப்பாகும் இந்நூல்.
16. ராமசாமி ஐயர் டி.சேலம்
வரிவசூல் சட்டங்கள் (Revenue Rules) முதற்பதிப்பு சி.வி.கிருஷ்ணசாமி பிள்ளை, இந்து அச்சுக் கூடம், சென்னை செப்டம்.1867.
17. ராமச்சந்திர ராவ் .எம்.
முத்திரைப் பதிவுச் சட்டச் சுருக்கம் (An Epitome of the Stamp and Registration Law) முதற்பதிப்பு, எம்.ராமச்சந்திர ராவ், லாரன்ஸ், அஸைலம் அச்சுக்கூடம், சென்னை, பிப் 1893.
18. ஐகந்நாத ராவ்
இந்துசட்டம் - திருத்திய பதிப்பு, இரண்டாம் பதிப்பு, எம்.ஜகந்நாதராவ், ஸ்ரீவித்தியா அச்சுக்கூடம், கும்பகோணம், டிசம்பர் 1891, இந்துச்சட்டம் அல்லது தர்ம சாஸ்திரத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு, விலை 1.1.0. பக்
19. டிரிவா, டபில்யு. எஸ்.
சென்னை ஊர்க்காவலர் மானுவல் (Madras Town Police Manual) முதற்பதிப்பு, பாஸ்டர் அச்சுக்கூடம், சென்னை ஜுலை 1870, தமிழ்பேசும் ஊர்க்காவலர்களுக்குப் பயன்படுமாறு அமைந்தது இந்நூல்.
20. ஸ்ரீநிவாச அப்பன் வி.எம்.
திருவல்லிக்கேணிக் கோவில் அதிகாரிகளுக்கும், தென்கலை வைணவர்களுக்கும் நடந்த வழக்குத் தீர்ப்பின் தமிழாக்கம். முதற்பதிப்பு எஸ்.பார்த்தசாரதி ஐயங்கார், ஸ்ரீ சரஸ்வதி பண்டாரம் அச்சுக்கூடம் சென்னை.
21. ஸ்டாஞ்சி டி.எல்
ஸ்டாஞ்சின் இந்துச் சட்டப் புத்தகம், மூன்றாம் பதிப்பு, சி.வி. கிருஷ்ணசாமிப் பிள்ளை,இந்து அச்சுக்கூடம், சென்னை, மே.1870, நல்ல காகிதத்தில் முறைப்படி அச்சிடப்பட்ட இந்நூல் உள்நாட்டின் வழக்கறிஞர்களுக்கும், இந்து மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் பயன்படுமாறு ஆக்கப்பட்ட இந்துச் சட்ட நூலாகும் விலை.2.00 பக் 115.



தமிழ்நாடடுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்ட சட்ட
(மொழிபெயர்ப்பு) நூல்கள்
1. அமைதிக்கால நாட்டிடைச் சட்டம், இர.வை.தனபாலன், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் (மே.பெ.அல்ல) டிச.1973.
இந்நூலில் நாட்டைச் சட்டத்தின் தோற்றம் வளர்ச்சி பற்றியும் அதற்கும் தனிமனிதனுக்கும் உள்ள தொடர்பு பற்றியும், அதன் இயல்பு பற்றிய பல்வேறு வேறுபாடுகள் பற்றியும் தூதியில், நாட்டிடை அமைப்புகள் போன்ற பல்வேறு கூறுகளைப் பற்றியும் என்னடைய திறமைக்குட்பபட்டு எளிய நடையில் விளக்கியுள்ளேன். குறிப்பாகத் தற்போது நாட்டிடைச் சட்டத்தில் முக்கியத்துவம் பெற்று வரும் தன் முடிவுரிமை (Self determination) பற்றியும் ஒரு பகுதி இணைத்துள்ளேன். தமிழகச் சட்டத்துறையின் ஆட்சிமொழி ஆணைக்குழுவினர் வெளியிட்டுள்ள சட்டச் சொல்அகராதியில் கூறியுள்ள தமிழ்ச் சட்ட சொற்களை இந்நூலில் பயன்படுத்தியுள்ளேன். தேவையான இடங்களில் புதிய சட்டச் சொற்களை நானே தமிழில் மொழியாக்கம் செய்து கையாண்டுள்ளேன். (கலைச்சொற்கள் பட்டியல்)
2. இந்திய இசுலாமயர் சட்டம் எச்.எம். அபுல்கலாம், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்,டிச.1973.
3. இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925, எ.பரிபூரணம், தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், மார்ச் 1979.
4. இந்தியாவில பாங்கியல் சட்டமும் (இரண்டாம் பாகம்) நடைமுறையும், எம்.எல்.டேனின், (தமிழாக்கம்) பு.சி.கந்தசாமி. மே, 1972.
5. இந்தியாவில் பாங்கியல் சட்டமும் (மூன்றாம் பகுதி தமிழாக்கம்) கூ.கருப்பன் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், மார்ச் 1982.
6. இந்துச் சட்டம், ச.செந்தில்நாதன், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், டிச.1973.
7. ஒப்பந்தச் சட்டவியல், ஏ.ஆர்.கனகன், தமி£நாட்டுப் பாடநூர் நிறுவனம் நவ.1973.
8. ஒப்பந்தச் சட்டவியல், ஏ.ஆர்.சனகன், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், நவ.1973.
9. கம்பெனிச் சட்டமும் செயலர் பண்பும், பி.சரவணவேல், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், டிச.1973.
10. குற்றஇயல் சட்டம் (Criminal Law) மா.சண்முகசுப்பிரமணியம், தமிழ் வெளியீட்டுக் கழகம், தமிழ்நாடு, அரசாங்கம், பதி.1966.
நீதியுணர்வு நெஞ்சிலே இயல்பால் எழுவதாகும். எனவே நீதியை வழங்குவது தாய்மொழியில்தான் அமைதல் வேண்டும் என்பதை அறிஞர்கள் அனைவரும் ஆதரிக்கின்றனர். தமிழிலேயே நீதி வழங்க வேண்டுமெனில் சட்ட நூல்கள் பல தமிழில் இயற்றப்பெற வேண்டும், சட்டத் தமிழ் இலக்கியம் வளர்ந்து பெருகவேண்டும் இந்த முயற்சியில் எழுந்ததே இந்நூல் (முகவுரைப் III) மொழிபெயர்ப்பு நூல் அல்ல (கலைச்சொற்கள் பட்டியல் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவன நூற்பட்டியல் இந்நூலின் இறுதியில் உள்ளது)
11. கூட்டுறவுச் சட்ட வரலாறும் நடைமுறைகளும். அ.பழனியப்ப முதலியார், ஏ.பி. பாலசுப்பிரமணியம், தமிழநாட்டுப் பாடநூல் நிறுவனம், ஆக.1973.
12. சொத்துரிமை மாற்றுச் சட்டம், ஆ.சந்திரசேகரன், தமிழ்நாட்டுப் பாடநூர் நிறுவனம் நவ.1976.





BIBLIOGRAPHY ON TRANSLATION
1. அபிஷேக் கேசு தீர்ப்பு - மு.ப.செ.1915, 23 சென்னை, விஸ்வகுலோத்தாரண பிரஸ், முதனூலுடன்.
2.. ஆக்கத் தொழிற்சாலைகள் சட்டம் (1948 ஆம் ஆண்டின் 63 வது சட்டம்) இராம.சுப்பிரமணியன், தி பாக்டேரியஸ் ஆக்ட்,1948 (63 ஆப் 1948), - எப்.1978, 90, சென்னை மங்கள நூலகம்.
3. இந்திய குடியரசு சட்டம், எஸ். கிருஷ்ணமூர்த்தி, தி கான்ஸ்டிடியுஷசன் ஆப் தி இண்டியன் ரிப்பப்ளிக், 1950, 232, சென்னை,(மொ.ர்.)
4. இந்தியாவில் பாங்கியல் சட்டமும் நடைமுறையும், 1, ம.பாலசுப்பிரமணியன், பேங்கிங் லா, அண்டு பிராக்டிஸ் இன் இண்டியா, எம்.எல்.டேனன், மு.ப. ஏப், 1972, 22 + 314, சென்னை, த.பா.நி.
5. இந்தியாவில் பாங்கியல் சட்டமும் நடைமுறையும், 2, பு.சி. கந்தசாமி, எம்.எல்.டேனன், மு.ப. மே.1972, 20 + 368. சென்னை, த.பா.நி.
6. இந்தியாவில் பாங்கியல் சட்டமும் நடைமுறையும் - 3, கூ.கருப்பன் எம்.எல்.டேனன், மு.ப.மார்ச் 1982, 15 + 488, சென்னை, த.பா.நி.
7. பரோடா வெடிகுண்டு சதி வழக்கு, கே.ஆர். பரோடா, டைனமைட் கேஸ், சி.ஜி.கே. ரெட்டி, மே.1978, 200, சென்னை, லீலா பப்ளிகேஷன்ஸ்.
8. முகமதியன் லா, ஆர்.சுப்பிரமணிய ஜயர் - 1903, 118, பிரஸிடென்ஸி பிரஸ்.
9. 1902 ஆம் வருஷத்திய சிவில் விவகார விஷயங்களில் அனுசரிக்க வேண்டிய விதிகள், ஏ.மகாலிங்க ஐயர், 1903, 251, திருச்சி செயின்ட் ஜோசப்ஸ் காலேஜ் பிரஸ்.
10. ஹிந்து லா அல்லது ஹிந்து தர்ம சாஸ்திர ஸங்கிரஹம் ம.ஸ்ரீனிவாஸராயர், 1884, 112, தஞ்சை பாப்புலர் ஸ்டாண்டர்ட் பிரஸ்.
11. ஹைக்கோர்ட் சிந்தாந்த சங்கிரகம், பா.முத்துசுவாமி பிள்ளை 1879, 242, சர்ச்மிஷன் அச்சு.
தெலுங்கு
1) தமிழ் லா சுருக்கம், ஆர், வெங்கடசுப்பாராவ், 1889, 190 சென்னை, லாரன்ஸ் அசைலம் பிரஸ்,
மொழியறியப்படாதன
2.) ஆயிரத்து தொள்ளாயிரத்து இரண்டாம் மூன்றாம் வருஷத்திய சென்னை அத்தியா இலாக்காவின் கராண்டினெயப் கோட் என்னும் திரவியச் சகாயச் சட்டம், கே.பார்த்தசாரதி ஐயங்கார், மு.ப.டிச.1902, 58 சென்னை, சி.டி.பிரஸ்
3) இந்திய தேசத்தின் இராணுவத்தைப் பற்றிய சட்டங்களிலிருந்து எடுக்கப்பட்ட பாகங்கள் - கட்டுப்பாடு, 1890, 94, சென்னை எஸ்.பி.ஸிகே பிரஸ்.
4) இந்தியன் பீனல்கோட் என்கிற இந்தியாவின் தண்டநீதி சாஸ்திரம் 1860 ஆம் வருட ஆவது ஆக்ட்டு, புதுக்கோட்டை சாமி ஐயர் ஐ.ப.1874, 173,சென்னை வர்த்தமான தரங்கினி அச்சுக்கூடம்.
5) இந்துலா, சூரிய நாராயணராவ், எச்.எஸ். கன்னிங்குஹாம், மு.ப. அக்.1885, 226, சென்னை வர்த்தமான தரங்கிணி அச்சுக்கூடம்.
6) உப்பு சம்பந்தமாய், சட்டங்களும், ஆக்ட்டுகளும், வி.கே.ராகவார்ச்சாரியார் ரூலிஸ் ரெகுலேசன்ஸ் அண்டு ரெவின்யு போர்டு சர்குலர் ஆர்டர்ஸ் பார் தி அட்மினிஸ்ட்ரேஷன் ஆப் தி சால்ட் ஆக்ட்ஸ்,1867.
7) சென்னை ரைவிந்யாச சபாஸ்திய்யமாறு சாசகங்கள் என்னும் ரிவின்யு போர்ட்டாருடைய நிலையான உத்திரவுகள், எஸ். ஜலசம் செட்டியார், தி ஸ்டேன்டிங் ஆர்டர்ஸ் ஆப் தி மெட்ராஸ் போர்டு ஆப் ரெவின்யு பாகம் 1820, 1866, ஆர்.ஓ.டால்யெல் (தொகு.)1968.
8) சென்னை சோஷலிசக் குடியரசுகளது ஒன்றியத்தின் அரசியல் சட்டம் (அடிப்படைச் சட்டம்) டிச. 1977, 158, சென்னை என்.சி.பி.எச்.
9) தர்மகர்த்தா, ஓ. நடேசபிள்ளை, மு.ப. பிப். 1913, 71, சென்னை பிராக்ரசிங் பிரஸ்.
10) தொழில் தகராறு சட்டம் (சட்டமும் விளக்கமும் 1972 வரை செய்யப்பட்ட திருத்தங்களுடன்) ப.விருத்தகிரி, மார்ச் 1968, ஐ.ப. நப.1975, 118, சென்னை, என்.சி.பி.எச்.
11) முகமதிய லா சுருக்கம், பி.எல். வ. இராசகோபாலாசாரியார் , நா.ப. 1869, 51, சென்னை கலாரத்நாகர அச்சுக்கூடம்.
12) ருஜி சாஸ்திர சார சங்கிரகம், கரூர் இராமாராவ், 1870, 67, சென்னை கிரேவீஸ் குக்ஸன் அண்டு கோ.
13) ஹிந்து தர்ம சாஸ்திரம், எஸ். வீராசாமி பிள்ளை, மானுவல் ஆப் ஹிண்டுலா, தி. எல். ஸ்ட்ரேன்ஜ், 1857, இ.ப. 1867, 117, சென்னை, ஹிந்து பிரஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக