ஞாயிறு, 25 அக்டோபர், 2009

நீதிமன்ற நடைமுறைகள்

நீதிமன்ற நிர்வாக நடைமுறைகள், மற்றும் வாதிடுதல் ஆகியன தமிழில் நடைபெறவேண்டும் என்று சுமார் 40 ஆண்டுகளாக அவ்வப்போது பேசுவதும், எழுதுவதும், கோரிக்கைகள் எழுப்பும் நிலை இருந்து வந்துள்ளது. ஆனால் அத்தகைய நிலை ஒருநாள் வரும் என்று எதிர்பார்ப்புடனும் அப்படி ஒரு காலம் வராதா? என்று ஏக்கத்துடனும், பலரும் இருக்கின்றனர். அப்படி ஒரு காலம் வரவே வராது என்று முடிவுடனும், அப்படி ஒரு நிலை வந்தால் அதில் சிக்கல்கள் தோன்றும் என்று பலரும் கூறுவதை நம்மாள் கேட்க முடிகிறது. தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்கள் அம்மாநில மக்கள் பேசும் மொ£யான தமிழில் செயல்படவேண்டும் என்ற நோக்கில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இன்றுவரை அந்த இலட்சியம் முழுமையடையாமல் தோய்வடைந்து காணப்படுகிறது. வழக்கறிஞர்கள் இதைப்பற்றி கூறும் பொழுது இப்பிரச்சினையின் அணுகுமுறைகள் குறித்து விளக்குகின்றனர்.
1) சட்டக்கல்வியின் பயிற்சி தமிழில் நடைபெறவேண்டும்.
2) நீதிமன்ற நடவடிக்கைகள் தமிழில் நடைபெறவேண்டும்.
3) நிர்வாக நடைமுறைகள் தமிழில் நடைபெறவேண்டும்.
ஆகிய இம்மூன்றும் கட்டாயமாக்கப்படவேண்டும். ஏனெனில் இம்மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை, தற்போது ஒரு சில சட்ட நடவடிட்ககைகள் மட்டும் ‘தமிழிலும்‘ நடைபெறலாம் என்பது ‘விரும்பினால்‘ நடைமுறைப் படுத்தலாம் என்ற நோக்குடன் உள்ளது. ஆனால நீதிமன்ற செயற்பாடுகள் ஆங்கிலேயர் ஆண்ட காலம் தொட்டு ஆங்கில மொழிதான் தமிழ்நாட்டின் சட்ட மொழி என்ற கருத்தோட்டம் நிலைபெற்றுவிட்டது. சட்டக் கல்லூரியில் பயிற்றுமொழி ஆங்கிலம், நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளில் ஆங்கிலம், நீதிமன்ற நிர்வாகம் முழுவதும ஆங்கிலம் என்பதால், அடிப்படையிலிருந்து பல மாறுதல்கள் செய்ய வேண்டியுள்ளது. முதலில் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு தமிழில் கற்பிக்க போதுமான கருவி நூல்கள் தமிழில் கொண்டு வரவேண்டும். இரண்டாவதாக தமிழநாட்டில் தமிழ் மொழிபேசும், தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகள்தான் நியமிக்கப்பட வேண்டும். அவ்வாறு நிலைமை மாறுமானால் வழக்குகளை விளக்கமாக வாதிட தமிழறிந்த வழக்கறிஞர்களுக்கு பெரிதும் பயனாக இருக்கும். வழக்கை முழுமையாக அறியவும், தௌ¤வடையவும் சரியான தீர்ப்பு வழங்கவும், நீதிபதிகளுக்கு உறுதுணையாக இருக்கும் தற்போது கீழ்க்கோர்ட்டு நடவடிக்கைகள் அனைத்தும் தமிழில் நடைபெறுகிறது. ஆனாலும் இந்த வழக்குகளின் தீர்ப்புகள், சாட்சியங்கள், சான்றாவணங்கள், போன்றவை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பும் பொழுது ஆங்கிலத்தில்தான் அனுப்ப முடியும், கீழ்க்கோர்ட்டுகள் தமிழில் நடைபெற்றாலும் அதன் பலன் முழுமையாக நமக்குக் கிட்டவில்லை என்றே கூறலாம்.
உயர்நீதிமன்றம் தமிழில் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவதை இந்தியாவின் வேறு மாநிலங்களிலிருந்து வந்த அல்லது வேறு மொழிபேசும் தமிழறியாத வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் விரும்பவில்லை. தொழில் ரீதியாக இந்நிலை அவர்களுக்கு பெருந்தடையாக அமையும். ஆனால் தமிழர்களுக்கு தற்போது உள்ள ஆங்கில மொழி நடைமுறை பெரிய தடைச்சுவராக உள்ளதை மட்டும் எவரும் கண்டு கொள்வதாக இல்லை. அல்லது கணக்கிலெடுத்துக் கொள்வதாக இல்லை. மேலும் பிறமொழியைச் சார்ந்த வழக்கறிஞர்கள், நீதிபதிகளின் ஆதிக்கமே சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலவுவதால் சட்ட நடைமுறைகள் தமிழில் வேண்டும் என்ற வாதிடும் வழக்கறிஞர்களின் கோரிக்கை கேட்பாரற்றதாகிவிட்டது. ஆகையால் மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி போன்றோர் ‘தமிழ்நாட்டில் தமிழ்பேசும் நீதிபதிகள்தான் நியமிக்கப்படவேண்டும், நீதிபதிகளை இடமாற்றம் செய்யக்கூடாது பிறமொழி பேசும் நீதிபதிகளுக்கு தமிழர்களுடைய மன இயல்புகளை எவ்வாறு அவர்கள் புரிந்து கொள்ள முடியும்‘ என்று கூறுகின்றனர். மேலும், ‘உயர்நீதிமன்ற நிர்வாக செயல்பாடுகளை தமிழில் கொண்டு வர முதலில் தமிழ் தட்டச்சுக்களை கொண்டு வரவேண்டும். தற்போது 10 ஆங்கில தட்டச்சுகளுக்கிடையே ஒரே ஒரு தமிழ் தட்டச்சு மட்டும் உள்ளது. சுருக்கெழுத்தாளர் நிலையும் இப்படித்தான் உள்ளது இப்படிப்பட்ட நிலைமைகள் தான் உயர்நீதிமன்றத்தில் தமிழிடை சட்ட நடவடிக்கைகள் தொடர பெருந் தடையாக உள்ளன என்று குறிப்பிட்டனர்.
1975 ஆம் ஆண்டு வரை சட்டக் கல்லூரி மாணவர்களுக்குத் தேவையான சட்ட நூல்கள் தமிழில் கொண்டு வரவும், சட்டச் சொல் அகராதிகள் வெளியிடவும், நீதிமனறங்களில் இரு தரப்பினரும் வழக்கின் போக்குகளை புரிந்துகொள்ள வழக்கறிஞர் தமிழில் வாதிடும் நிலை வரவேண்டும் என்று கோரிக்கைகளை முன் வைத்தும் சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால் அதற்குப் பிறகு இத்தகைய முயற்சிகள் நின்று போய் விட்டன என்று கூறுகிறார் மூத்த வழக்கறிஞரும், பேராசிரியருமான எச்.எம். அபுல்கலாம் இவர் இந்திய தண்டனைச் சட்டம் இந்திய இசுலாமியச் சட்டம், முஸ்லீம் சட்டம், இந்தியச் சான்றுச் சட்டம் ஆகிய நூல்களைத் தமிழில் வெளியிட்டுள்ளார். சட்ட நூல்கள் மொழி பெயர்ப்புக்குறித்து இவரிடம் கேட்டபொழுது நாம் முயன்றால் சட்ட நூல்களை தமிழில் கொண்டு வரமுடியும், அதற்கு முறையாக, ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு நிறுவனமாக அரசும் ஆர்வலர்களும் செயல்பட வேண்டும். முன்பு தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டச் சொல்லாக்க ஆணைக்குழு ஒன்று இருந்து அதில் பல மூத்த வழக்கறிஞர்கள், நீதிபதிகள், தமிழறிஞர்கள், பலர் ஈடுபட்டு சில அகராதிகள், நூல்களை வெளியிட்டனர். அத்தகைய முயற்சியும், ஈடுபாடும் தற்போது இல்லை. ஒரு சில தனிப்பட்டோரின் முயற்சியின் காரணமாக சில சட்டநூல்கள் தமிழில் வெளிவருகின்றன. ஆனால் அவை போதுமானதல்ல. தமிழில் சட்ட நூல்களை மொழிபெயர்க்க முடியாது என்பதை நான் மறுக்கிறேன். கட்டாயமாக தமிழில் கொண்டு வரமுடியும். ஆங்கிலத்துக்கு நிகரான சட்ட சொற்கள் தமிழ் இல்லை என்பதையே பலரும் கூறி பெருந் தடையை உருவாக்கி விடுகின்றனர். முதலில் மக்கள் அறிந்த வழக்கு சொல், புழக்கத்தில் உள்ள ஆங்கில சொல், பிறமொழிச் சொல் இப்படி ஏதாவது ஒன்றை நாம் பயன்படுத்தி சட்டத் தொடர்களை முதலில் அமைத்து நடைமுறைக்கு கொண்டு வரலாம். இதில் எந்த மாதிரியான சொற்கள் நிலை பெறுகிறதோ அதையே நாம் எல்லா இடங்களிலும் பயன்படுத்தலாம் உதாரணமாக ‘ரிட் மனு‘ என்று கூறினால் இச்சொல் எல்லோருக்கும் புரிகிறது. அதேபோ, matter, fact என்ற சொற்களுக்கு, விஷயம், சங்கதி, செய்தி, உண்மை, பொருண்மை என்று ஏதாவது ஒரு பொருளில் இடம் பெறுகிறது. இவற்றில் எந்த சொல் பயன்படுத்தினால் அது எளிமையாகப் புரியும் என்பதைக் கொண்டு நம் தேவையை நிறைவு செய்து கொள்ளலாம் ( எ.கா.Relevancy of facts -சங்கதிகளின் தொடர்புடைமை) அதை விட்டு செந்தமிழ்ச் சொற்களைத்தான் பயன்படுத்த வேண்டும், இலக்கிய வழக்குச் சொற்களைப் போடவேண்டும் என்ற பிடிவாதத்தால் பயன் ஏதுமில்லை. தமிழறிஞர்களுக்கும் சட்டத் துறை அறிஞர்களுக்குமிடையே ஏற்பட்ட இத்தகைய வாதமே இறுதியில் சட்ட மொழி பெயர்ப்பு முயற்சிக்குப் பெருந் தடைக் கல்லாக அமைந்துவிட்டது. அத்துடன் நம் தமிழர்களுக்கு விழிப்புணர்ச்சியும் முயற்சியும் மிகக்குறைவு என்பதும் தான் நம்முடைய தலைகுனிவுக்கு முக்கியக் காரணம் என்று கூறுகிறார். பேராசியர் எம்.எம்.அபுல்கலாம், 1930 களில் தொடங்கிய இந்தி எதிர்பு போராட்டத்தின் விளைவாக இந்தி மொழி ஆதிக்கம் ஒழிய வேண்டும், தமிழுக்கு முதலிடம் தர வேண்டும் என்ற கொள்கை தோன்றியது. திராவிட இயக்கத்தின் இந்த முயற்சியினால் தமிழ் மக்களிடையே ஒரு பெரும் விழிப்புணர்வு தோன்றாத உண்மையே, தாய் மொழியை பாதுகாக்கவும், வளர்க்கவும் இந்தி எதிர்ப்பு என்ற ஆயுதத்தை மட்டும் கையிலெடுத்தார்களே ஓழிய ஆங்கில மொழி ஆதிக்கத்தை எதிர்க்காமல், அதை அரவணைத்ததின் விளைவுதான் இன்றைய நிலை அதனால் Hindi never, English Ever என்ற இருநிலை போக்கு உருவாகி தமிழ் வளர்ச்சி என்பது பலவழிகளில் குறுகிப்போனது. இந்த போக்கினால் சட்டத்துரையிலும் ஆட்சித்துறையிலும் ஆங்கிலத்தின் ஆதிக்கம் முதன்மையாகவும் முக்கியமாகவும் நிலவுகிறது.
மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட உரிமையியல் (Civil Court) நீதிமன்றங்களில் தீர்ப்புகளும் தமிழிலேயே இருக்க வேண்டும் என்று ஆணையிடும் அதிகாரத்தையும் தமிழக அரசு பெற்றுள்ளது. உரிய வேளையில் தமிழக அரசு அப்படி ஆணையிட முடியும், அத்துடன் சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட குற்றவியல் (Criminal Court) மற்றும் உரிமையியல் ( Civil Courts) நீதிமன்றங்களின் அனைத்து செயல்பாடுகளும் தமிழிலேயே நடைபெறவேண்டும் என்ற நிலை உருவாகின்ற காலம் வெகு தொலைவில் இல்லை எனப் பல வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் கருதுகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றிய மு.மு.இஸ்மாயில் தற்போதுள்ள நடவடிக்கைகள் பற்றி குறிப்பிடும் பொழுது.
1) சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆதிக்கத்திற்குட்பட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் அனைத்திலும் சாட்சியம் தமிழிலேயே பதிவு செய்யப்படுகிறது.
2) சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆதிக்கத்துக்குட்ட குற்றவியல் நீதி மன்றங்களில் தீர்ப்பும் தமிழிலேயே எழுதப்படுகிறது.
3) சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆதிக்கத்திற்குட்பட்ட உரிமையியல் நீதிமன்றங்களிலும் தீர்ப்பு தமிழிலேயே இருக்க வேண்டும் என்று விதிக்கின்ற அதிகாரம் தமிழக அரசுக்குக் கொடுக்கப் பெற்றிருக்கிறது. இருந்தாலும் இன்றுவரையிலும் அந்த அதிகாரத்தை தமிழக அரசு பயன்படுத்தவில்லை 1‘. என்றுரைக்கிறார்.

---------------------------------------------------------------
1) தீர்ப்புதிரட்டு, மலர்.1, இதழ் 1, ஜனவரி.1980 (பதிப்) மா.சண்முக சுப்பிரமணியன், ப-9.
சட்ட மொழிபெயர்ப்பு
சட்டத்துறையிலே தமிழ்மொழி போதிய அளவு வரவில்ல தமிழில் சட்டத்திற்கான சொற்றொடர்கள் மிகமிக குறைவு,ஆங்கிலத்தில் இருப்பதைப் போன்று சட்ட வார்த்தைகளுக்குத் தனித்தனிச் சொற்கள் தமிழில் இல்லை என்ற குறையும் எனக்கு உண்டு ‘லா‘ என்ற ஆங்கில வார்த்தைக்குச் சட்டம் என்று சொல்லுகிறோம். ‘ஆக்ட்‘ என்ற வார்த்தைக்கும் தமிழில் சட்டம் என்றுதான் சொல்கிறோம். ‘ஆக்ட்‘ என்பதற்குத் தமிழில் சரியான தனிச் சொல் இல்லை. இது போலவே லெஜிஸ்லேட்சர் அசெம்பிளி என்பதற்குச் சட்டமன்றம் என்கிறோம் ‘லா கவுன்சில் என்பதற்கும் அதே தொடரைத்தான் பயன்படுத்தவேண்டியுள்ளது. சட்டமன்றத்தில் சட்டங்களை இயற்றுகிறோம். அந்தச் சட்டம் சட்டமாவதற்கு முன்பு ஆங்கிலத்தில் ‘பில்‘ என்பர் தமிழில் ‘சட்ட முன்வடிவு‘ என்பர் தமிழில் அதற்குத் தனிச் சொல் இல்லை.
ஆங்கிலத்தில் ‘கான்ஸ்டிட்யூஷன்‘ என்ற சொல்லிற்கும் அரசியல் ‘சட்டம்‘ என்று அங்கும் சட்டம் என்ற சொல்லைத்தான் பயன்படுத்துகிறோம். ஆனால் ஆங்கிலத்தில் Law, Bill, Act, Legislature, Constitution முதலிய தனித்தனிச் சொற்களைப் பயன்படுத்துகின்றனர்.
தமிழில் சட்டத்துறையில் சொற்கள் மிகக்குறைவு இன்னும் அதிகச் சொற்களை - தனித்தனிச் சொற்களை ஆக்க வேண்டிய கடமை சட்ட வல்லுநர்களுக்கு, சட்டத்துறையிலே இருப்பவர்களுக்கு நீதியரசர் உள்பட அனைவருக்கும் அந்தப் பொறுப்பு இருக்கிறது - கடமை இருக்கிறது.
சட்டத்தினுடைய குறிக்கோள் நீதியை நிலைநாட்டுவதுதான். அதனால்தான் ‘சால்மண்ட்‘ மிக அழகாகச் சொன்னார்கள். Justice is the end, Law is merely the instrument and the means. Positive law - அரசால் இயற்றப்பட்ட நெறி, Natural law- அறநெறி,
கடைசியாக வழங்கப்படுவது நீதி, நீதி வழங்கப்படுவதற்குரிய ஒரு கருவியாக வழிமுறையாக மட்டுமே சட்டம் இருக்கிறது என்றார்.
இன்றைக்கு நீதிமன்றங்கள் என்று நாம் அழைப்பதைப் பழங்காலத்தில் ‘அறங்கூறவையங்கள்‘ என்றனர். ‘அறம்‘ தனிமனிதனை உயர்த்துகிறது. ‘சட்டம்‘ தனிமனிதனைத் திருத்துகின்றது.
உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமானால்
"ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என் மற்றுச் சான்றோர் முகத்துக் களி"
இது மது அருந்தக்கூடாது என்பதற்காக வள்ளுவர் வழங்குகின்ற அறிவுரை. மது அருந்தியவன் தன்னைப் பெற்ற தாயாலும் விரும்பப்பட மாட்டான் என்கிறார்.
ஆனால் இதுவே மதுவிலக்குச் சட்டமாக வருகிறபோது மது அருந்துவதை அது குற்றமாக ஆக்குகிறது. அறிவுரையாக இருக்கும் போது மனிதனைத் திருத்துகிறது சட்டமாக ஆக்கும்போது அவனைத் தண்டித்துக் குற்றமாக ஆக்கித் தண்டனையைத் தருகிறது.
சட்ட மொழிபெயர்ப்புக்குரிய தேவையான சில அடிப்படை விதிமுறைகள் பின்வருமாறு
1) மொழிபெயர்ப்பாளர் ஆங்கில மொழியிலும் பிராந்திய பெயர்ப்பு மொழியிலும் நல்ல ஆற்றல் வாய்ந்தவராக இருத்தல் வேண்டும் இடர்பாடு ஏதுமில்லாமல் நிறைவான சட்ட மொழி பெயர்ப்புப் பணிக்கு இருமொழி ஆற்றல் இன்றியமையாதது.
2) அத்துடன் சொல்வளமும், துறைத் தொடர்பான சிக்கல்களை அறிந்த பயிற்சியுடையவராக, தௌ¤வு பெற வாய்ப்புடையவராக, மூல மொழியிலும், பெயர்ப்பு மொழியிலும் போதுமான அளவிற்கு வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்கவராகவும் சட்ட மொழிபெயர்ப்பாளருக்குரிய அடிப்படைத் தகுதிகளாகும்.
3) சட்ட மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருக்கும் ஒரு மொழிபெயர்ப்பாளர், சட்டயியலிலும் சட்ட நடைமுறையிலும் கைதேர்ந்தவராக இருத்தல் வேண்டும் என்பது தேவையாக உள்ளது. அவர் சட்டத்தை கையாள்வதிலும், அமுல்படுத்துவதிலும் நன்றாக தேர்ச்சிப் பெற்றவராக, கேள்விக் கிடங்கொடுக்காதவாராகவும் இருத்தல் வேண்டும்.
4) மொழிபெயர்ப்பாளர் ஆங்கில மற்றும் இந்திய பிராந்திய மொழிகளுக்கிடையில் உள்ள அடிப்படையான வேறுபாடுகளையும் அந்த இரண்டு மொழிகளில் மொழியமைப்புகளில் உள்ள மொத்த வேறுபாடுகளையும் அறிந்திருத்தல் வேண்டும்.
5) மொழிபெயர்ப்பின் போது, மொழிபெயர்ப்பாளர் வேறு எதையும் சேர்க்காமலும், எதையும் விடுபடாமலும், மொழி பெயர்ப்பின் மூல பொருளை சரியாக வழங்க வேண்டும். மிகத் துல்லியமாகவும் மூலத்திற்கு உண்மையாகவும் மொழிபெயர்ப்பது சட்ட மொழி பெயர்ப்பில் சிறந்த முக்கியத்துவ முடையதாகும் ஒரு ஆங்கில சட்ட சொற்றொடர் இரண்டு அல்லது மூன்று விளக்கங்களை உடையதாக இருந்தால், மொழிபெயர்ப்பினும் அதே மாதிரியான கருத்துடைய சொற்றொடரை வழங்க வேண்டும். வேறுபட்ட விளக்கங்கள் அளிக்க எவ்வித முயற்சியையும் எடுக்கக்கூடாது மொழிபெயர்ப்பில் பொருள் மற்றும் உணர்வின் ஒவ்வொரு சாயலையும் மாற்றிக் கொடுக்கப்பட வேண்டும்.
6) ஆங்கில கருதுகோள்களுக்கு பொருத்தமான சமன்களை பிராந்திய மொழிகளில் கண்டுபிடிப்பது என்பது மிகவும் கடினமான பணியாகும். சட்ட அறிவோ அல்லது சட்ட நடைமுறைகளோ அறியாத இலக்கியத் திறன் மிகுந்தவர்களால் ஆங்கில, பிராந்திய மொழி அகராதிகள் தயாரிக்கப்பட்டு இருப்பதனால், அவை இந்த விசயத்திற்கு அதிகமாகப் பயன் இருக்காது. இதே அகராதிகாளல் இருக்கும் சில வார்த்தைகளுக்கு கொடுக்கப்பட்ட சமன்கள் பொருத்தமானதாகவோ அல்லது சரியானதாகவோ இல்லாமல் இருக்கலாம். எனவே அவற்றை மொழி பெயர்ப்பில் ஏற்று பயன்படுத்த முடியாது. சில ஆங்கில வார்த்தைகளுக்கு நேரடியான தமிழ் சமன்கள் இல்லை. அவை கீழ்க்கண்டவாறு மொழி பெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது.
Alternative : இரண்டிலொன்றாக
Abscond : சட்டத்திற்கு தப்பி ஓடு
Civil Surgeon : குடியியல் அறுவை மருத்துவர்
Habitual Offender : வாடிக்கைக் குற்றவாளி
Refreshing one’s : நினைவுபடுத்து
Memory
Adultery : மணமுறை பிறழ்ந்த புணர்ச்சி
7) ஆங்கில மொழிக்கே உரிய சில தனி சிறப்பான சட்ட கருதுகோள்கள் மொழிபெயர்ப்புக்கு கடையாக இருக்கின்றன. அந்த வகையில் பெயர்ப்பு மொழியில் புதிய வார்த்தைகளை உருவாக்குதல் தவிர்க்க இயலாமல் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது. ஆனால் அதுபோன்று உருவாக்கப்படுபவை மேலும் குறைக்கப்பட முடியாத அளவுக்கு குறைக்கப்பட வேண்டும். மேலும் ஆங்கில சட்ட கருத்துருக்களைக் குறிக்க உருவாக்கப்படும் சொற்கள் பொதுவாக எல்லோரும் புரிந்து கொள்ளம் வகையில் இருக்கவேண்டும். அவை பிராந்திய மொழி உணர்வுக்கும் னே¢மைக்கும் ஏற்றதாக அமைதல் வேண்டும். அவை அந்த சட்ட கருத்துருக்களை ஏறத்தாழ குறிப்பதாக இருக்கவேண்டும் அவ்வாறு உருவாக்கப்படுபவை அதிமேதை தன்மையுடையதாக இருந்துவிடக்கூடாது. அதே நேரத்தில் மொழி ஒலிப்பு விதிகளக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். எடுத்துக் காட்டாக ‘இனஸ்ட்ரக்ட்‘ (instruct) என்ற சொல்லை தமிழில் ‘ஏவுரைச் செய்‘ என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
Subject matter : விஷயப்பொருள்
Minority : இளமை
Majority : முதிர்மை
Proposal : தெரிப்புரை
Disfigurement : உருக்குலைத்தல்
Payment : செலுத்தம்
Passport : பயணப்பட்டயம்
Stipulation in a ஒப்பந்தத்தில் ஒரு உடன்படுகை
contract :
Probate : உயில் மெய்ப்பிதழ்.
மேலும் ஆங்கிலத்தில் ‘பிரசிடென்ட்‘ (precedent) என்ற சொல்லுக்கு தமிழில் இணையான சொல் இல்லை, ‘லீகல் பிரசிடெணட்‘ என்பது அனைவரும் அறிந்த ஒரு சட்டக் கோட்பாடு. ‘முன்நிகழ்வுக்கான ஒரு விதி‘, ‘ஒரு முன்தீர்ப்பு‘ அல்லது நடைமுறை என்பவை இதன் பொருள். தமிழ்நாடு மாநில ஆட்சி மொழிக்குழு ‘ஐடியல்‘ (ideal) என்ற சொல்லைக் ‘குறிக்கோள்‘ என்றும் கொட்டேசன் (Quotation) என்ற சொல்லை ‘மேற்கோள்‘ என்றும், ‘இன்டர்பிரடேஷன்‘ (interpretation) என்ற சொல்லை ‘பொருள்கோள்‘ என்றும் மொழி பெயர்த்துள்ளது. அதே கோட்பாட்டின் அடிப்படையில் ‘பிரசிடென்ட்‘ (Precedent) என்ற சொல்லை ‘முற்கோள்‘ என்று மொழிபெயர்த்துள்ளோம். ‘முன்னால் கொள்ளப்பட்டது அதாவது ‘ஏற்கனவே கொள்ளப்பட்ட சட்டத் தீர்மானம்‘. இந்த மாதிரியான மொழிபெயர்ப்பு நிறைவானதாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கின்றது. ஆனால் ஆங்கில சட்டக் கருத்துருக்களுக்கு மொழியாக்கம் பெறப்படும மொழிகளில் ஏதாவது புதிய சொல் உருவாக்கும் முன்பு, பொதுவாக வழக்கில் அதற்கு இணையான சொல் வழங்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி இணையான சொல் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்ட பின்னரே புதிய சொல்லாக்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் இதற்கும் பிராந்திய மொழிகளில் புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு உயிர்த்தெழச் செய்யவேண்டும். அதன் மூலக்கருத்தின் பொருளைக் குறிக்கும்படி பயன்படுத்த வேண்டும்.
8) ஒவ்வொரு மொழிபெயர்ப்பு முயற்சியும், பிராந்திய மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்படும் ஆங்கில சட்ட வார்த்தைகளுக்கு இடையில் உள்ள நுட்பமான வேறுபாடுகளை வெளிக்கொணரும வகையில் செய்யப்பட வேண்டும். ‘கன்பர்ம்‘ (confirm) அஃபர்ம் (Affirm) கொராபரேட் (Corroborate) போன்ற வார்த்தைகள் ஒரே பொருளைக் கொண்ட சொற்களாகத் தோன்றுகின்றன. ஆனால் அதை அவற்றிற்கே உரிய வேறுபட்ட பொருட்களையும் கொண்டிருக்கின்றன. அவற்றை ‘உறுதிப்படுத்து‘, ‘உறுதியூட்டு‘ என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கீழ்க்கண்டவாறு ஆங்கிலச் சொற்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
Principle : நெறி
Doctrine : கோட்பாடு
Policy : கொள்கை
Association : கழகம்
Society : சங்கம்
Signal : அறிவிப்புக்குறி
Sign : அடையாளக்குறி
image : படிமம்
Annull : பயனற்றதாக்கு
Quash : நசித்தல்
Cancel : ரத்து செய்தல்
Dismiss : தள்ளுபடிசெய்
Reject : நிராகரி
Repeal : கழி
Invalidate : செல்லாததென ரத்து செய்
Void : விழல்
Reverse : எதிர்மாறாக்கு
Revoke : தீர்த்தல் செய்
Vacate : காலி செய்
Set aside : நீக்கு
மற்றும் சில சொற்கள் கீழ்க்கண்டவாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
Adjourn : ஒத்திவை, தள்ளிவை
Postpone : ஒத்திப்போடு, தள்ளிப்போடு
Prorogue : கலைக்காதொத்திவை
அதேபோல
encroachment : ஆக்கிரமிப்பு
Trespass : அத்துமீறுதல்
Contravention : மீறுகை
மற்றும் சில சொற்கள்
Incide : ஏவு
Instigate : தூவிடு
Damage : சேதம்
Hurt : காயம்
Harm : தீங்கு
injury : கேடு
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு தொடர் பின்வருமாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்த்தையின் கருதுகோள்களுக்கு இடையில் உள்ள வேறுபாடுகளை வெளிக் காட்டுகின்றது. ‘ All Public roads, Streets, lanes and paths, bridges, ditches, dikes, and fences’ "பொதுச் சாலைகள், தெருக்கள், சந்துகள், பாதைகள், பாலங்கள், அகழிகள், அணைகள், வேலிகள் அனைத்தும்‘ "River includes any streams. canals, backwaters, creeks, and other channels, natural or artificial" என்ற தொடர் கீழ்க்கண்டவாறு மொழிபெயர்க்கப்படுகிறது. ‘ ஆறு என்பது இயற்கையான அல்லது செயற்கையான, ஓடைகள், கால்வாய்களை, உப்பங்கழிகள், சிற்றோடைகள், எவற்றையும் அல்லது வேறு வாய்க்கால்கள் எவற்றையும் உள்ளடக்கும்.
9) ‘டிஸ்பெர்சல்‘ (disposal) என்ற வார்த்தையின் பொருள் கருதுகோள்களுக்கு ஏற்றவாறு மாறுகிறது. அது இடத்திற்குத் தகுந்தவாறு மொழி பெயர்க்கப்படவேண்டும். எடுத்துக்காட்டாக "The Sessions Judge may make provisions for the disposal of the case" என்பதை ‘செசன்ஸ் நீதிபதி வழக்கைத் தீர்த்து வைப்பதற்கான ஏற்பாட்டைச் செய்யலாம்., என்றும் Concealment of Birth, by Secret Disposal of the dead body" என்பதை ‘செதத உடலை ரகசயமாக அப்புறப்படுத்திப் பிள்ளைப் பேற்றை மறைத்தல்’ என்றும் Proper disposal of the cases" என்பதை ‘உரியமுறையில் வழக்குகளைத் தீர்மானித்தல்‘ என்றும் "Pending disposal of the Appeal" என்பதை ‘மேல்முறையீடு முடிவு செய்யப்படும் வரை‘ என்றும், " Assisting in the disposal of the stolen property" என்பதை ‘திருட்டுப் பொருளை அப்புறப்படுத்துவதற்கு உதவி செய்தல்‘ என்றும் "Being at the disposal of the Government என்பதை ‘ அரசின் ஏவலில் இருத்தல்‘ என்றும் மொழி பெயர்க்கலாம் ‘Posting’ என்ற சொல் வேறுபட்ட கருதுகோள்களில் வேறுபட்ட பொருள்களைத் தருகின்றது ‘posting a letter’ கடிதத்தை தபாலில் இருத்தல் ‘ posting a notice in a place" ஒரு இடத்தில் அறிவிப்பை இடத்தில் அறிவிப்பை ஒட்டுதல், Clear, certain, definite, exact, specific போன்றஒரே மாதிரியான சொற்களை மொழிபெயர்க்கப்படும் பொழுது அவற்றின் வேறுபாட்டைக் காட்டவேண்டும். அவற்றைத் தமிழில் முறையே, ‘தௌ¤வாக, தேற்ற, திட்டமாக, துல்லியமாக, குறிப்பாக என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதேபோல ‘suffer’ என்ற சொல்லைப் பயன்படுத்தும்போது அதன் வேறுபாட்டை வெளிக்கொணர வேண்டும். அதாவது ‘suffer an imprissionment’ (தண்டனையை அனுபவி,) Suffer a decree (ஆணையால் பாதிக்கப்பட்டு) suffers the breach ( அத்துமீறலால் பாதிக்கப்பட்டு) போன்றவை. "The Railway is a Common Carrier" என்ற தொடரை தமிழில் ‘ரயில் ஒரு பொது ஊர்தியா‘ என்று மொழிபெர்க்கப்பட்டுள்ளது.
10) "Set-Off" என்ற வார்த்தையை ‘எதிர்க்கட்டு செய்தல்‘ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ‘It shall cease to function’ என்ற வாக்கியத்தைத் தமிழில் ‘அது இயங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்‘ என்று மொழிபெயர்க் கப்படுகிறது. ‘allow’ ‘permit’ ‘consent’, ‘suffer’, ‘concur’, ‘sanction’, ‘authorise’ போன்ற சொற்களுக்கு ‘இடம்கொடு‘, ‘அனுமதி‘, ‘சம்மதம்‘, ‘சகித்துக்கொள்‘, ‘இணங்கு‘, ‘ஒப்பளிப்புச் செய்‘, ‘அதிகாரம் அளி‘ என்று வேறுபட்ட பொருளைக் கொடுக்கின்றன, ‘grant’ . ‘reward’, ‘present’. ‘prize’. ‘award’. ‘donation’, ‘gift’,போன்றவை, ‘கொடை‘, ‘வெகுமதி‘ ‘அன்பளிப்பு‘, ‘பரிசு‘, ‘அளிப்பு‘, ‘நன்கொடை‘, ‘இனாம்‘, என்று வேறுபட்ட பொருள்களை தருகின்றன. ‘This Act will not apply to Kashmir" என்ற வாக்கியத்தை ‘இந்தச்சட்டம், காஷ்மீர் மீது இயங்காது‘ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
11) சில ஆங்கில, உருது, அராபிக் சொற்கள் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக பொதுவான பேச்சுவவழக்கை கொண்டுள்ளன. அவற்றைப் பிராந்திய மொழிகளுக்குக் கொண்டுவரும் பொழுது மொழிபெயர்க்கத் தேவையில்லை. ‘Sessions’ என்ற சொல்லை ‘செஷன்ஸ்‘ என்றும் ‘Will’ என்பதை ‘உயில்‘ என்றும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அதேபோல ‘Attorney’, ‘Notary’, ‘Corporation’, ‘company’, போன்றவற்றை மொழிபெயர்க்கப்படாமல் பிராந்திய மொழிகளில் அப்படியே எடுத்துக்கொள்வது நல்லது. அதேபோல ‘appearance’ என்பதற்கு ஆஜர் (Ajar) என்றும் ‘Bail’ என்பதற்கு ‘ஜாமீன‘ (Jamin) என்றும், Attachment என்பதற்கு ‘ஜப்தி‘ (Japti) என்றும், Land tax என்பதற்கு ‘கிஸ்த்‘ ‘kist’ என்றும் ‘enforce’ என்பதற்கு ‘அமல்படுத்து‘ (Amal) என்றும் அதே வடிவத்தில் புரிந்து கொள்ளப்படுவதால் அவற்றை அப்படியே கையாள முடியும்.
14) பிராந்திய மொழிகளில் செய்யப்படும் மொழிபெயர்ப்பு, தௌ¤வாக, சுருக்கமாக இருப்பதோடு, அறிவுபூர்வமாக இருக்க வேண்டும். மேலும் சாதாரண மனிதன் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும்.
என்று தமிழ்நாடு ஆட்சி மொழிக்குழுவின் உறுப்பினராகவும், செயலாளராகவும் இருந்த ஏ.சிதம்பரம் அவர்கள் "Aspects of Translation of Laws into Indian Languages" எனும் ஆங்கிலக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட மொழிபெயர்ப்பை பொறுத்தமட்டில் செய்தியும், அதன் அமைப்பும் மிகவும் முக்கியமானதாகக் கொள்ளப்படுகிறது. மூலத்தில் உள்ள சட்ட தொடரை பெயர்ப்பு மொழியில் நுணுக்கமாக, தௌ¤வாக, பொருள்மாறுபடாமல், அழகாக வெளிப்படுத்த வேண்டும் என்பதும், சட்டத் தொடரில் எதையும் சேர்க்கவோ, தவிர்க்கவோ, அல்லது விலக்கவோ கூடாது என்பதும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.சட்ட மொழிபெயர்ப்புச் (எ.டு) சிக்கல்
illegal, unlawful, illicit என்ற மூன்று சொற்களும் ஒரே பொருளை உணர்த்துவன அல்ல இவற்றின் நுட்பமான பொருள் வேறுபாட்டினைக் காட்டும் வகையில் புதிய சொற்றொடர்களைத் தமிழில் ஆக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. சட்டச் சொற்கள் அல்லாத சாதாரண சொற்களில் கூட இத்தகையச் சிக்கல்கள் எத்தனையோ எழுகின்றன. Hope, Trust, Belief, Confidence Faith என்ற சொற்களில் வேறுபட்ட பொருள்களை ‘நம்பிக்கை‘ என்ற ஒரே தமிழ்ச் சொல் குறிப்பதில்லை. I hope that the trust and faith reposed in him will not go in vain என்ற ஒரே வாக்கியத்தில், hope, Trust, faith என்ற சொற்கள் வருகின்றன அவற்றின் வேறுபாட்டினைக் கூறும் முயற்சியில் புதிய சொற்களை ஆக்குவது இன்றியமையாததாகிறது. Freedom என்பது ‘சுதந்திரம்‘ அல்லது விடுதலை என்றால் ‘Liberty’ என்பதற்குவேறு சொல் அவசியமாகிறது. Freedom of Expression என்று சாதாரணமாக ஆங்கிலத்தில் சொல்லப்படுவதைத் தமிழில் எளிதாகக் கூற இயலுகிறதா? சுருங்கச் சொல்லி விளங்கவைக்கம் திருக்குறளைப் படைத்த தமிழில் இவற்றையெல்லாம் திறம்படக் கூறுவது இயலாதா? இயலும், உறுதியாக இயலும்‘ 1. என்று மா. சண்முக சுப்பிரமணியன் குறிப்பிடுகிறார்.

---------------------------------------------------------------
1) தீர்ப்புத் திரட்டு, ஜனவரி 1980, பக்கம் 4.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக