தமிழுலகில் பலநூறு மொழிபெயர்ப்பாளர்கள் வலம் வந்துள்ளனர். கா.ஸ்ரீ.ஸ்ரீ. எனும் மூன்றெழுத்தப் பெயராக்கிக்கொண்ட அந்த மாமனிதரின் பெயரை, நாம் சொன்னாலும் அல்ல பிறர் சொல்லக்கேட்டாலும் மனதில் காண்டேகர் என்ற பெயரும் சேர்ந்தே ஒலிப்பது போல் தோன்றும், உயிரும் உடலும் போல அந்த இரண்டு கதச்சிற்பிகள், மராட்டிய இலக்கிய உலகிலும், தமிழ் இலக்கிய உலகிலும் புதிய இலக்கிய மணத்தைப் பரப்பியவர்கள்.
அறிஞர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. 1940, 1950 ஆம் ஆண்டுகளில் மராட்டிய இலக்கியச் சிற்பி வி.ஸ. காண்டேகரின் நாவல்களயும், சிறுகதைகளையும் தமிழகத்திற்கு வந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியவர். இன்றும் அந்தக் கதைகளை மனதில் அசைபோட்டு கண்ணை மூடி இரசித் அதன் சுவையை அந்தக் கதாபாத்திரங்களை அழியாதச் சித்திரங்களாக்கிச் சொல்லி மகிழ்பவர்கள் எத்தனையோ பேர், ஒருமொழிபெயர்ப்பாளர் தன் மொழிபெயர்ப்பின் மூலம் இப்படி ஒரு நிலையை ஒரு மொழியில், படப்புலகில் உருவாக்க முடியும் என்பதை நிரூவிக்காட்டியவர். ‘தமிழகக் காண்டேகர்‘ என்ற பாராட்டப் பெற்றவர் கா.ஸ்ரீ.ஸ்ரீ.
கா. ஸ்ரீ.ஸ்ரீநிவாஸாச்சாரியர் எனும் பெயரைச் சுருக்கி கா.ஸ்ரீ.ஸ்ரீ என்ற பெயரில் புகழ் பெற்ற இவர் உத்திரப்பிரதேசத்தில் ‘பிருந்தாவனம்‘ என்ற ஊரில் 15.12.1913 இல் பிறந்தார். இவருடய தாயும் தந்தையும் காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள். தந்த - ஸ்ரீரங்காச்சாரியார், தாய் -ருக்குமணி அம்மாள், இவர்கள் பழமையான ஆசார முறைகளைப் பின்பற்றி வாழ்ந்தவர்கள். கா.ஸ்ரீ.ஸ்ரீ-யின் தந்த ஸ்ரீரங்காச்சாரியர் சமஸ்கிருதச் சாத்திரங்களிலும் ஆகமங்களிலும் வல்லவர். இந்தி, தெலுங்கு,. வங்க மொழிகள அறிந்தவர், அதனால் கா.ஸ்ரீ.ஸ்ரீ தன் தந்தையிடம் சிறு வயதிலேயே வடமொழி காவியங்களயும், நாடகங்களையும், வணவ நூல்களயும், பயின்று வந்தார். பம்பாய்க்கு அருகில் ’கல்யாண்’ என்ற இடத்திலிருந்த லஷ்மி வெங்கடேசுவர அச்சகத்தில் கா-ஸ்ரீ.ஸ்ரீ யின் தந்தையார் பணியாற்றும் சூழல் ஏற்பட்ட அப்போது கல்யாணில் தமிழ் கற்கும் பள்ளி இல்லாமயால் கா.ஸ்ரீ.ஸ்ரீ. வீட்டிலேயே தமிழ் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார். மராட்டிப் பள்ளியில் சேர்ந்த மராட்டியும் ஆங்கிலமும் பயின்றார், மராட்டியில் நன்றாக பேசவும், எழுதவும் பழகினார்.
மராட்டியில் ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுது இவரை வாழ்வில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது. இவரை வலது காதில்கடுமையான வலியுடன், சீழ்கட்டத் தொடங்கிய, மருத்துவம் செய்தும் குணமாகவில்லை. எனவே, இவரை பெற்றோர் இவரை சென்னக்கு அழத்து வந்து, அறுவை சிகிச்சை செய்தனர். உடல் நலிவுற்ற கா.ஸ்ரீ.ஸ்ரீ. பின்பு தாயின் ஆதரவில் காஞ்சிபுரத்திற்கு வந், பச்சயப்பன் உயர்நிலப்பள்ளியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார்.
காஞ்சிபுரத்தில் ஒரு வேதப்பண்டிதரிடம் இவர் வேதக் கல்வி பயின்றார். ஏற்கனவே இருந்த இந்திமொழி அறிவை வளர்த்து அதில் புலமைப் பெற்றார். 1930-ல் நடைபெற்ற பள்ளியிறுதிப் பொதுத்தேர்வில் சென்னை, காஞ்சிபுரம், சிதம்பரம் ஆகிய மூன்று இடங்களிலுமுள்ள பச்சயப்பன் உயர்நிலப் பள்ளிகளில் ஆங்கிலம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிப் பாடங்களில் முதல் மாணவராக வெற்றி பெற்று கா.ஸ்ரீ.ஸ்ரீ தங்கப் பதக்கம் பெற்றார். இவர் பள்ளிப் படிப்பை முடித்தும் அந்தக் கால வழக்கப்படி 1930 ஆம் ஆண்டு இலட்சுமி அம்மாள் என்ற பெண்ண திருமணம் செய்கொண்டார்.
எழுவதில் ஈடுபாடு கொண்ட கா.ஸ்ரீ.ஸ்ரீ 1934ஆம் ஆண்டு தொடக்கத்தில் சென்னயிலேயே வேலைத்தேட முயன்றார். வேலயும் கிடத்தது. இந்திப் பிரச்சார சபை அச்சகத்தில் மாதம் 30 ரூபாய் ஊதியத்தில் கா.ஸ்ரீ.ஸ்ரீ பணியாற்றினார். அப்பொழுது இரண்டு மூன்று மாதங்களில் தெலுங்கு, கன்னடம், மலயாள மொழிகள அவற்றின் எழுத்து முறைகளுடன் ஓரளவு கற்க வேண்டுமென்று இந்தி பிரச்சார சபையினர் போட்ட நிபந்தனையை ஏற்றுக் கொண்டு அதன்படியே சில மாதங்களில் இவர் அந்த மொழிகள ஓரளவு கற்றுக்கொண்டார். அச்சுக் கூடத்தில் கால எட்டரை மணி முதல் மாலை அய்ந்தரை மணிவரை அச்சுப்படி பிழைத் திருத்தம் செய்யும் கடுமையான வேலை, மாலயில் அச்சுக்கூட வேலை முடிந்ததுமே , பெரம்பூருக்குச் சென்று இந்தி வகுப்பு நடத்வார். இவர் நடத்திய அந்த வகுப்பில் பெரும்பாலும் இரயில்வே பணியாளர்கள் இருந்தனர்.
பிறகு இவர் நுங்கம்பாக்கத்தில் (சென்னை) தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பில் முதன் முதல் இந்தி வகுப்பத் தொடங்கியபோது ஜே.சிவசண்முகப் பிள்ளயும், வழக்கறிஞர் பாஷ்யமும் தலைமை தாங்கிய நிகழ்ச்சி குறிப்பிடத்தக்கது. அறுபத்தந்து ஆண்டுகளுக்கு முன்பு தாழ்த்தப்பட்ட சாதியினரைத் தீண்டத் தகாதவராக உயர் சாதியினர் கருதி நடத்தி வந்த காலத்தில் உயர்சாதி வைதீக வகுப்பைச் சேர்ந்த கா.ஸ்ரீ.ஸ்ரீ.தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பில் இத்தகைய முயற்சியைத் தொடங்கினார் என்பது பெரிதும் பாராட்டுக்குரியது ஆகும். மிகப் பெரும் சாதனையாகவும் கருதக்கூடியதாகும்.
1937ஆம் ஆண்டு மார்ச் மாதம் மகாத்மா காந்தி சென்னை வந்தார். அப்போது, உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் எழுதிய தமிழ் வரவேற்புரையை இந்தி மொழியாக்கம் செய்யும் வாய்ப்பு கா.ஸ்ரீ.ஸ்ரீ. க்கு கிடத்தது. இதையொட்டி கி..வா.ஜ-வின் அறிமுகம் கிடத்தது. தொடர்ந்து கலைமகளில் பணியாற்றும் வாய்ப்பும் கிட்டியது.
கா.ஸ்ரீ.ஸ்ரீ என்னும் அறிஞரை அடயாளம் காட்டிய பெருமை கலைமகள், மஞ்சரி இதழ் நிறுவனத்தாரையும், அல்லயன்ஸ் நிறுவனத்தாரையும் சென்று சேரும். அல்லயன்ஸ் வெளியீட்டளாரின் மூன்று தலைமுறைகளின் தொடர்புகளைப் பெறறவர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. 1940 களில் கா.ஸ்ரீ.ஸ்ரீ. தொடங்கிய காண்டேகரின் இலக்கியப் பணியை அல்லயன்ஸ் நிறுவனத்தார் தொடர்ந்து செய்து வருகின்றனர். 1940-50 களில் சுமார் பதினந்து ஆண்டு காலம் தமிழ்நாட்டில் காண்டேகர் காலம் எனறு சொல்லும் அளவிற்கு நிலபெற்றிருந்தது என்பதை பலரும் அறிவர். கா.ஸ்ரீ.ஸ்ரீ. மொழிபெயர்ப்பில், காண்டேகரின், எரிநட்சத்திரம், இருதுருவங்கள், மனோரஞ்சிதம், வெண்முகில், இருமனம், வெறுங்கோயில், சுகம் எங்கே, முதற்காதல், கருகிய மொட்டு, கிரௌஞ்சவதம், கண்ணீர், யயாதி, அமுதக்கொடி, ஆகிய 13 நாவல்களும் 150 சிறுகதைகளும் வெளிவந்துள்ளன. இவை கலைமகள் அல்லது அல்லயன்ஸ் வெளியீடுகளில் 1942 முதல் 1990 வர பல பதிப்புகள் வெளிவந்தன.
காண்டேகர் எழுத்க்கள் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக சில தமிழ் எழுத்தார்கள் காண்டேகர் பாணியில் நாவல்கள் எழுத முற்பட்டார்கள் இவ்வாறு எழுத முற்பட்டவர்களில், டாக்டர் மு.வ. அவர்கள குறிப்பிட்டுக் கூறலாம். காண்டேகர் படப்புக்களுக்கு தமிழில் அப்படி ஒரு செல்வாக்கு ஏற்படக் காரணம் காண்டேகரின் படப்புகள் அனத்ம் மனித நேயம், பரிவு, பாசம், அன்பு, காதல், ஆகிய மனித உளவியல் போக்குகள அதன் முக்கியத்துவத்த எடுத்துக் காட்டுவனவாகும். மனிதநேயமே அனைத்திலும் உயர்ந்த என்பதில் உறுதியான நம்பிக்க கொண்டவராகக் காண்டேகர் திகழ்ந்தார், என்பதுதான்.
பதினந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள், ஆகியவ காண்டேகரின் எழுத்துக்களாகத் திகழ்கின்றன.
இந்த எழுத்துக்களில் புதிய சமூக உருவாக்கம், புதிய அணுகுமுறை பின்புலமாக இருப்பத அறிஞர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. நன்கு உணர்ந்திருந்தார். இதைத் தமிழில் எடுத்துச்சொல்லியே ஆகவேண்டும் என்ற உறுதியோடு கா.ஸ்ரீ.ஸ்ரீ. தாம் ஒரு படைப்பாளியாக இருந்தாலும், மொழிபெயர்ப்பதற்கே முதலிடம் கொடுத்து காண்டேகரை முன்நிறுத்தினார்.
சென்னக்கு வந்தபிறகு மராட்டிய இலக்கிய உலகில் சிறந்து விளங்கும் 400, 500 நூல்களை மராட்டிய மொழியில் படித்தேன். மராட்டிய இலக்கியம் எவ்வளவு ஆழ்ந்தது என்பதைப் பல புத்தகங்களில் வழியாக அறிந்தேன். தமிழ், குஜராத்தி, இந்தி, வங்கம் ஆகிய மொழிகளில் காண்டேகரின் நாவல்கள் மிகுதியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆனாலும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அளவுக்கு மற்ற மொழிகளில் இல்லை. மூல நூலாசிரியரே மொழிபெயர்ப்பாளரைப் பாராட்டுகின்ற சிறப்பு எனக்கு கிடத்தது. காண்டகரே பல இடங்களில் என்னைப்பற்றி குறிப்பிட்டுள்ளார். காண்டேகரைப் போல், தமிழில் மட்டுமல்ல வேறு எந்த இந்திய மொழியிலும் எந்த ஆசிரியரும் இல்லை. பரந்த படிப்பு, அனுபவம், ஆழ்ந்த புலம உயர்ந்த மணிமொழிகள், புதிய உத்திகள், பழமொழிகளைத் தொகுத்துக் கொடுத்தல் ஆகியவை காண்டேகரின் தனிச்சிறப்பு எனறு அறிஞர் கா.ஸ்ரீ.ஸ்ரீ-ய சந்திக்கும் பொழுது கூறினார்.
இவர் தமிழ்ப் படைப்புகளையும் மராத்தி, இந்தி மொழிகளில் மொழிப்பெயர்த்துள்ளார். சூடாமணியின் சிறுகதையை மராத்தியில் மொழிபெயர்த்தேன். அகிலன், ஞானப்பீடப்பரிசு பெற்ற போது அவரைப் பற்றிய அறிமுகக் கட்டுரையை மராட்டியப் பத்திரிகைகளில் எழுதியிருக்கிறேன். மாதவயா முதல் சிதம்பர சுப்பிரமணியன் வரையில் பன்னிரண்டு எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளை இந்தியில் மொழிபெயர்த்தேன். பாரதியாரின் ’தராசு’ வட இந்தியில் மொழிபெயர்த்து வெளியிட்டேன்‘ என்றார்.
ஆனால், வாழ்நாள் முழுவம், காண்டேகரின் எழுத்க்களை தமிழில் மொழிபெயர்ப்பதை ஒரு இலட்சியமாகக் கொண்டதன் காரணத்தைச் சொல்லும் பொழுது எது இலக்கியம், எது இலக்கியமாகாது, ஒரு மொழிபெயர்ப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதை விளக்கினார்.
‘குறிக்கோள் இல்லாத, இலட்சியமற்ற இலக்கியம் சிறந்த இலக்கியமாகாது. கணவனும் மனவியும் பேசுவது போல மக்களிடம் இலக்கியம் பேச வேண்டும். படைப்பாளி தன்னுடய படிப்பு, அனுபவம், வல்லமை, கற்பனைத் திறன், உயர்ந்த நோக்கம், ஆகியவற்றை ஒருங்கிணைத்து வாசகர்களுக்குக் கொடுக்கின்றபோழுது சிறந்த இலக்கியம் உருவாகும். இத்தகைய சிறப்புகளை யெல்லாம் உணர்ந்து தன்னுடைய படப்பை வழங்கியவர் மராட்டிய இலக்கியச் சிற்பி காண்டேகர்.
இப்படிப்பட்ட சிறந்த படப்பாளியின் எழுத்துக்கள தமிழில் மொழிபெயர்க்கும் பொழுது அந்த இலக்கியத்தின் புதிய மணம், புதிய நோக்கங்கள், இலக்கியச் சுவை, வண்ணக்கோலங்கள் ஆகியவற்றை பெறமுடியும் என்ற தன்னம்பிக்க ஏற்பட்டது. மொழிபெயர்ப்பு என்பது ஒரு நுண்கலை. மின்சாரம் ரயில் வண்டிய இழுத்துச் செல்வதுபோல மொழிபெயர்ப்பு அமைய வேண்டும். வாசகனைத் தன்வயப்படுத்ம் வகையில் எளிமையான நடையில் மொழிபெயர்ப்பைக் கொண்டு வரவேண்டும். மூலநூலாசியரைவிட மொழிபெயர்ப்பாளருக்கு பொறுப்பு அதிகம் என்றார் கா.ஸ்ரீ.ஸ்ரீ.
கா.ஸ்ரீ.ஸ்ரீ-யின் தமிழாக்கம் அவை மராட்டியிலிருந்து மொழிபெயர்க்கப் பட்டவை என்று தோன்றாத விதத்தில் அமந்திருந்ததே காண்டேகர் நாவல்களின் வெற்றிக்கு முக்கிய காரணம்.
இந்த மொழிபெயர்ப்புப் பணியைப் பற்றி கூறும் பொழுது சில இடங்களில் சில மாறுதல்கள் செய்துள்ளேன் என்று கூறினார் கா.ஸ்ரீ.ஸ்ரீ. இருதுருவங்கள் என்ற நாவலில் ‘ஸாவ்ளா‘ என்ற பாத்திரம் வருகிறது. ஸாவ்ளா என்றால் =கருப்பன்’ என்று பொருள், ‘ஸாவ்ளா‘ என்றே எழுதினால் வாசகருக்குப் படிக்கையில் அலுப்புத்தட்டும். எனவே கருப்பன் என்றே குறித்திருக்கிறேன். சுகம் எங்கே என்ற நாவலில் ஓர் இடத்தில் பாபூகெனூ என்பவனைப் பற்றிய குறிப்பு வருகிறது. ஆனால். பாபுகெனு என்பவன் யார் என்ப இன்று மராட்டியருக்கே தெரியாது. 1932ல் சத்தியாக்கிரத்தில் பிரிட்டிஷ் ராணுவத்தினர் லாரியால் நசுக்கிக் கொன்ற தொழிலாளச் சிறுவன் அவன். அவன தியாகம் விடுதலப் போரில் மிகவும் சிறந்ததாகக் கருதப்பெற்றது. இப்படி அங்கங்கே விளக்கம் தந்திருக்கிறேன். என்று கூறும் கா.ஸ்ரீ.ஸ்ரீ எந்த நூல தமிழாக்கத்திற்கு எடுத்க் கொண்டாலும் அதப் பற்றிய முழுத் தகவலயும் சேகரித்துக் கொள்கிறார். மராட்டிய இன மக்களின் வாழ்வும் சிந்தனையும் தமிழர்களின் வாழ்வுடனும், சிந்தனையுடனும் ஒருங்கே அமைந்திருப்பதாலும் அந்நியத்தனம் இல்லாமல் கா.ஸ்ரீ.ஸ்ரீ.-யின் மொழி பெயர்ப்பு தமிழிலேயே எழுதிய போல் அமைந்துள்ளது.
மற்றொரு காரணம் மராட்டியிலிருந்து தமிழில் நேரடியாக மொழிபெயர்க்க தமிழ் எழுத்தாளர்கள் எவரும் முன்வரவில்லை, ‘ காண்டேகர் இலக்கியம் வெற்றியுலா வந்ததற்குப் பல காரணங்கள் , அவற்றில் முக்கியமான ஒன்று வங்க-ஹிந்தி நாவல்கள் பெரும்பாலும் தமிழில் வந்து அந்த அலை ஓய்ந்திருந்த போது காண்டேகர் இலக்கியம் தமிழகத்தில் தென்றலாக வீசியது. அது கற்பனை இலக்கியமன்று, வாழ்விலக்கியம், எனவே அதைத் தமிழ் வாசகர்கள் ஆர்வத்துடன் வரவேற்றார்கள். ‘அந்த நாளய பிரபலத் தமிழ் எழுத்தாளர்களான புலமைப்பித்தன், கு.ப.ரா., தி.ஜ.ரா., முதலியோர், அண்ணா உட்பட, காண்டேகர் இலக்கியத்தைத் தமிழ் வார-மாத ஏடுகளில் விமர்சித்தார்கள். அந்த விமர்சனங்கள இன்று திரட்ட முடிந்தால், சுமார் 150 பக்கம் கொண்ட ஆய்வு நூலாகும், காண்டேகர் என்னைத் தவிர வேறு எவருக்கும் தமது இலக்கியத்தைத் தமிழில் மொழிபெயர்க்க அனுமதி கொடுக்கவில்லை. அவர் என்னிடம் மிக்க நம்பிக்கையும் அன்பும் கொண்டிருந்தார். தவிரவும் மாராட்டியிலிருந் தமிழில் திறமயுடன் மொழிபெயர்க்ககூடிய தமிழ் எழுத்தாளர் அன்று முதல் இன்று வரை இல்லை எனலாம். எனவே, இந்தத் துறையில் நான் எதிரியில்லாத மன்னராகத் திகழ்ந்தேன் என்றார் கா.ஸ்ரீ.ஸ்ரீ.
தமிழ்ப் பட உலகிற்குக் காண்டேகர் இலக்கியம் பெரிதும் உதவியுள்ளது என்பதையும் குறிப்பிட்டார் ‘நாலைந்து ஆண்டுகளுக்கு முன், ஒரு சினிமா டைரெக்டர் தமிழ்ப் பட உலகில் காண்டேகரின் தாக்கம‘¢ என்ப பற்றி சென்னை வானொலியில் பேசியதாகக் கேள்வியுற்றேன். ‘கேள்வியுற்றேன்‘ என்று நான் சொல்வதற்குக் காரணம் நான் பெரும்பாலும் படங்கள் பார்ப்பதில்லை. அதற்கு எனக்குப் பொழுது இருக்கவில்லை எனவே காண்டேகர் இலக்கியத்திலிருந் எந்தக் காட்சிகள் எந்தப் படத்தில் வந்துள்ளது என்பதை நான் அறியேன்.
இப்படி காண்டேகர் இலக்கியம் தமிழர் வாழ்வில் பல துறைகளில் ஊடுருவி இருக்கிறது. அது என்றும் வற்றாமல் ஓடுகின்ற ஜீவநதி, என்றும் தொடரும் வாழ்வது போலவே, அதுவும் மக்களின் வாழ்வப் பயன்படுத்தி ஓங்கி நிற்கும் வஜஸ்தம்பம், அதைப்பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம், என்றார் கா.ஸ்ரீ.ஸ்ரீ.
காண்டேகரும் கா.ஸ்ரீ.ஸ்ரீ-யும்
இருவரும் தன்னடக்கம் மிக்கவர்கள், காட்சிக்கு எளியவர்கள், பிறரை மதித்துப்போற்றும் பண்புடயவர்கள் / சிந்தனையிலும், செயலிலும் ஒன்று போல வாழ்ந்தவர்கள். இருவரும் சீர்திருத்த சிந்தனை நோக்குடையவர்கள். இருவரும் தாழ்த்தப்பட்ட ஏழை மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தலில் ஈடுபட்டவர்கள், இருவரும் மனவளம், கருத்துவளம், செயல்வளம், இருந்த அளவிற்கு உடல் நல மின்மையால் துன்புற்றவர்கள். இலக்கியப் பணியையே தங்களது வாழ்நாள் பணியாகக் கொண்டவர்கள் ஒரே நூலுக்காக (யயாதி) பரிசுப் பெற்றவர்கள். எனப் பலவிதங்களில் ஒன்று போல வாழ்க்கையை நடத்தியவர்கள். இத்தகய நல்லறிஞர்களின் புகழ் என்றும் நிலைத்து நிற்கக் கூடியவை.
கா.ஸ்ரீ.ஸ்ரீ. பற்றிய தங்களுடைய கருத்துகள் பயனுள்ளவையாக இருந்தது. நன்றி.
பதிலளிநீக்குhello mam, did he write any books related to mahabharatham? please let me know, searching for my dad.
பதிலளிநீக்கு